பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/684

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hardware security

683

hardwired logic



காட்டும் ஒளிப்பேழை இடைத் தடுப்பில் உள்ளடக்கங்களை மாற்றுவதற்குப் பதிலாக, தொடக்க நிலையை மாற்று வதன் மூலம் செயற்படுகிறது.

hardware security : வன்பொருள் பாதுகாப்பு : கணினிக்குப் பாதுகாப்பளிப்பதற்காக வரம்புகள், பதிவேடுகள், பூட்டுகள் போன்ற வன்பொருள்களைப் பயன் படுத்துதல்.

hardware specialist : வன் பொருள் வல்லுநர் : ஒரு கணினி அமைப்பின் கருவிகளைப் பராமரித்து, பழுதுகளைக் கண்டறிந்து சரி செய்யும் நபர்.

hardware tree : வன்பொருள் மரவுரு : விண்டோஸ் 95 இயக்க முறையில், கணினி அமைப்பின் வன்பொருள் சாதனங்களின் வரையறைகள், தேவைகள் பற்றிய தரவுகள் அடங்கிய ஒரு தரவுக் கட்டமைவு (data structure). ஒரு மரத்தில் வேரில் தொடங்கி, கிளை பிரிவது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு கணுவும் (nodes) இயங்கும் ஒரு சாதனத்தைச் சுட்டுகிறது. இந்த வன்பொருள் மரவுரு அமைப்பு இயங்குநிலை யிலேயே வடிவமைக்கப்படு கிறது. ஒவ்வொருமுறை விண்டோஸ் 95 இயக்கப்படும் போதும் இந்தப் பட்டியல் புதுப் பிக்கப்படுகிறது. இந்த மரவுருப் பட்டியலே விண்டோஸ் 95 முறைமையின் இணைத்து இயக்கு (plug and play) திறனை or இயல்விக்கிறது.

hardware virtual memory : வன் பொருள் நடைமுறை நினைவகம் : ஒரு சிப்புவினுள் அமைக்கப்பட்டுள்ள நடைமுறை நினைவக மேலாண்மை. நடைமுறை நினைவகத்தை மென்பொருளி னால் மட்டுமே இயக்கமுடியுமாயினும் இதனை வன்பொருளால் செய்வது அதிகத் திறனுடையதாக இருக்கும்.

hardware windowing : வன் பொருள் சாளரமாக்கும்.

hardwired : கம்பிவழி; கம்பி மூலம் : இரண்டு மின்னணுக் கருவிகளுக்கிடையில் கம்பி மூலம் இணைப்பு அளிப்பது குறித்தது.

hardwired logic : வன்கம்பியாகக்கிய தருக்கமுறை : ஒருங்கிணைந்த சுற்று வழியில் (அல்லது சிப்பு வில்) உற்பத்தியாளரினால் உள் முகமாக அமைக்கப்பட்டுள்ள தருக்கமுறை. இது வாயில்களுக் கிடையிலும், வாயில்களிலும் அமைக்கப்பட்டுள்ள கம்பியிணைப்பினைக் குறிக்கிறது.