பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

heap

688

helical wave guide


heap : தொகுதி : கணிப்புக்காக ஒரு நிரலாக்கத்தொடர் கடன் வாங்கி பின்னர் திருப்பியளிக்கிற சேமிப்பக இடங்களின் தொகுதி.

heap sort : குவியல் வரிசை யாக்கம்.

hearsay : கேள்வியறிவு : CMU தயாரித்துள்ள ஒரு செயற்கை நுண்ணறிவுத் திறன் (Al) செயல் முறை. இது, அடுத்தடுத்து இரண்டு செயல்முறை களைக் கொண்டிருக்கும்.

heatex : வெப்பக் குறைப்பி : பல்வேறு செய்முறைத் தொகுதிகளிடையே வெப்பத்தைப் பரி மாற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கிற, எரியாற்றல் தேவையைக் குறும அளவுக்குக் குறைக்கிற இணையத்தை உருவாக்குவதில் உதவிபுரிகிற நிபுணத்துவப் பொறியமைவு.

heath/zenith : ஹீத்Hr/ஸெனித் : நுண் கணினி கருவி மற்றும் மின்னணுப் பெட்டிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்பவர்.

heating elements : வெப்ப மூட்டும் தனிமங்கள்.

வெப்ப வடிகால்

heat sink : வெப்ப வடிகால் : சுற்றுப்புறச் சூழலுக்கு வெப்பத்தைச் சிதறும்படி செய்கிற ஒரு மின்கடத்தாப் பொருளுடன் வெப்ப வடிகால் அல்லது அதன் பகுதியுடன் இணைக்கப்படும் ஒரு கட்டமைவு. இது பொதுவாக உலோகத்தில் அமைந்திருக்கும்.

heavy client : பருத்த கிளையன்.

hecto : ஹெக்டோ : எண்ணின் முன்பகுதியில் எப்போதாவது பயன்படுத்துவது. இதன் பொருள் "நூறு".

height : உயரம்.

helical scan : திருகு சுழல் நுண்ணாய்வு (வருடல்)  : ஒளிப்பேழை நாடாவிலும், இலக்க முறை ஒலிப்பேழை நாடாவிலும் பயன்படுத்தப்படும் மூலை விட்டத் தடத் தொடர்பு. இது ஒரு போகு முறைகளில் சேமிப்புத் திறம்பாட்டினை அதிகரிக்கிறது.

helical wave guide : சுருள் அலை வழிப்படுத்தி.