பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hermaphroditic

690

hexadecimal notation



hermaphroditic : இருபாற்கூறுகளுடைய : நீட்டப்பகுதியும், செருகு பகுதியும் ஒருங்கேயுடைய இணைப்பி. இது ஆண் பகுதி தனியாகவும், பெண் பகுதி தனியாகவும் உள்ள இணைப்பி களிலிருந்து வேறுபட்டது.

hertz ஹெர்ட்ஸ் (அதிர்வெண் அலகு) : ஒரு விநாடிக்கான மின்காந்த அலைச் சுற்றுகள் அல்லது சுழற்சிகள். சுருக்கமாக Hz என்று அழைக்கப்படுகிறது.

heruistic programme : தன் மேம்பாட்டுச் செயல்வரைவு : ஒரு செயல்முறை ஒவ்வொருமுறை ஒடும்போதும் தன் சொந்தச் செயல்களின் விளைவுகளிலிருந்து கற்றுக் கொண்டு, அடுத்த தடவை தனது பணியை மேம்படுத்துவதற்குத் தக்க மாற்றங்களைச் செய்து கொள் ளும் வகையில் எழுதப்பட்டுள்ள செயல்வரைவு.

heterogeneous environment : கதம்பச் சூழல் பல்வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ள சாதனம்.

heuristic : பட்டறிவு சார்ந்த : பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வு வழி. இம்முறையில் இறுதி முடிவுகளை அடைவதற்கான ஒவ் வொரு நடவடிக்கையையும் படிப்படியாக மதிப்பிட்டு தீர்வு எட்டப்படுகிறது. கண்டுபிடிப்பு ஒன்றில் உதவும் பொதுவான அறிவின் பயன்பாடு பற்றியது. Algorithm என்பதற்க்கு எதிர் நிலையானது.

heuristic learning : பட்டறிவு வழி கற்றல் : அனுபவத்திலிருந்து கண்டுபிடிக்கும் வழி. தங்கள் தவறுகளில் இருந்து கணினிகள் கற்றுக்கொள்ளும் வழி. தங்கள் நடவடிக்கைகளில் இருந்து, வெற்றியைத் தராத, பயனைத் தராத நடவடிக்கைகளை நீக்குதல்.

Hewlett-Packard : ஹீவ்லெட்- பேக் கார்ட் : கலிபோர்னியாவிலுள்ள மின்னணுவியல் கருவிகள், கணிப்பிகள், கணினிகள் உற்பத்தியாளர்கள். பெயர்ச் சுருக்கம் : HP.

hexadecimal : பதினாறிலக்கமுறை : "16"- ஐ ஆதாரமாகக் கொண்ட எண்மான முறை. இதனை "அறுபதின் மானம் (Hexadecimal) என்றும் கூறுவர்.

hexadecimal notation : பதிளாறிலக்கக் குறிமானம் பத்து களுக்குப் பதிலாக பதினாறு களைக் கொண்ட குறிமானம். இதில், 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் பயன்படுத்தப் படுகின்றன. A, B, C, D, E, F, என்ற