பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/692

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hexadecimal motation

691

HGC plus



எழுத்துகள் 10, 11, 12, 13, 14, 15 என்ற எண்களைக் குறிக்கின்றன. பதின்மானக் குறிமானத் தில் ஒரு நான்கு இலக்க எண் ணில் ஒவ்வொரு இலக்கமும் ஆயிரங்கள். நூறுகள், பத்துகள், ஒன்றுகள் ஆகியவற்றைக் குறிக் கின்றன. பதினாறிலக்கக் குறி மானத்தில் ஒவ்வொரு இலக்க மும் 09டுகள், 256கள், 16கள், ஒன்று கள் ஆகியவற்றைக் குறிக் கின்றன. இவ்வாறு

A60B = (10 x 163) + (6 x 162) + (0 x 161) + (11 x 160) = (10 x 4096) + (6 x 256) + (0 x 16) + (11 x 1) = 40960 + 1536 + 0 + 11 = 42507 (பதின்மானம்) கணினிகளில் பதினாறிலக்க முறை பயன்படுத்தப்படுவதற்குக் காரணம், எண்களைச் சேமித்துவைக்கும் முறை யாகும். ஈரிலக்க முறையில் 0 முதல் 9 வரையிலான இலக்கங்களைச் சேமிக்க 0000 முதல் 0101 வரையிலான இலக்கங்கள் தேவை. இதனால் நமது இயல்பு எண்களுக்கு நான்கு ஈரிலக்க எண்களைப் பயன்படுத்த வேண் டும். ஆனால் நான்கு ஈரிலக்க இலக்கங்களைக் கொண்டு 0 முதல் 9 வரையில் மட்டுமின்றி 0 முதல் 15 வரையிலும் சேமிக்க லாம். அதாவது, 0000 முதல் 1111 வரைச் சேமிக்க முடியும். எனவே, பதினாறிலக்க முறை யில், கணினியிலுள்ள சேமிப்புக் குறியீடுகள், அனைத்தையும் நாம் பயன்படுத்தலாம்.

hexadecimal number : அறுபதின்ம எண் : ஒற்றை இலக்கத்துக்கும் கூடுதலான எண். ஒரு மொத்தத் தொகையைக் குறிப்பது. அதில் ஒவ்வொரு எண்ணும் அளவை 16 இன் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. பயன்படுத்தப்படும் எண்கள். 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E & F.

hexadecimal point : அனுமதியின்றி புள்ளி : அறுபதின்மக் கலவை எண் ஒன்றில் முழு எண்ணையும் பின்னப் பகுதிகளையும் பிரித்துக்காட்டும் மூலப்புள்ளி. அறுபதின்ம எண் 3F மற்றும் 6A7இல் அறுபதின்மப் புள்ளி எண்கள் 'F' -க்கும் 6-க்கும் இடையே உள்ளது.

HGC plus : ஹெச்ஜிசி பிளஸ் : ஹெர்க்குலிஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனம் 1986ஆம் ஆண்டு அறிமுகப்படுத் திய 36 ஒளிக்காட்சித் தகவி அட்டை. இதில், 256 எழுத்து களை 12 எழுத்துருக்களில் இருத்தி வைக்கக் கூடுதலான இடைநிலை நினைவகம் கொண்டது. வரைகலை வடி