பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hidden objects

693

hierarchical database


பின்புல வண்ணங்களில் வரையப்படும் கோடுகள். அந்த வண்ணங்கள் மறையும்வரைக் கண்ணுக்குப் புலனாவதில்லை. ஒரு வரைபடத்தில் கண்ணுக்குப் புலனாகாத கோடுகள்.

hidden objects : மறை பொருள்கள்' : தெளிவான உருக்கொண்ட பொருள் திடப்பொருளாக வைக்கப்பட்டால் அவை மற்ற பொருள்களால் மறைக்கப்படலாம்.

hidden surface : மறைதளம் : வரைபடத்தில் முப்பரிமாண திடப்பொருளாகக் காட்டப்பட்டால் பார்வையிலிருந்து மறையக்கூடிய வெளிப்பகுதி அல்லது தளப்பகுதி.

hide window : சாளரம் மறை.

hierarchical : படிநிலை முறை : ஒரு பெற்றோரின் வாயிலாக மட்டுமே பொருள்கள் அணுகத் தக்கவை என்பதை வலியுறுத்தும் கண்டிப்பான படிநிலை முறை. ஒரு நிறுமத்தில் அமைவன வரைபடம் போன்ற, பல்வேறு படிநிலை களைக் கொண்ட கட்டமைவு, உயர்மட்ட நிலைகள், கீழ்மட்ட நிலைகள் மீது கட்டுப்பாடு அல்லது ஆதிக்கம் கொண்டிருக்கும். செய்தித்தொடர்புகளில், படிநிலை என்பது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மைய முனைகள் மீதும் கட்டுப்பாடு கொண்டுள்ள தனியொரு கணினியைக் குறிக்கும்.

hierarchical communication : படிநிலைமுறைச் செய்தித் தொடர்புகள் : எல்லா இணைப்புகளை யும் மேலாண்மை செய்யும் பொறுப்புடைய ஒரு தாய்க் கணினியினால் கட்டுப்படுத்தப்படும் இணையம். இது "சரியிணைச் செய்தித் தொடர்பு கள்" (Peer-to Peer Communication) என்பதிலி ருந்து மாறுபட்டது.

hierarchial computer network : படிநிலை கணினிப் பிணையம் : 1. ஒரு தலைமைப் புரவன் (Host) கணினி பல சிறிய கணினிகளை மேலா ண்மை செய்யும். ஒவ்வொரு சிறிய கணினியும் பல்வேறு பீசி பணிநிலையங்களின் வழங்கனாகச் செயல்படும். இத்தகைய பிணையம் படிநிலைப் பிணையம் எனப்படுகிறது. 2. தரவு செயலாக்கப் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டும், கட்டுப்பாட்டுப் பணிகள் அதிகாரப் படிநிலைப்படி ஒழுங்கமைக்கப் பட்டும் இருக்கும் ஒரு பிணையம்.

hierarchical database : படிநிலைத் தரவுத் தளம் : பல்வேறு தரவுக் கூறுகளிடையே ஒன்று டன் ஒன்றின் தொடர்புகள், ஒரு