பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/696

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hierarchy

695

high byte



கோப்பு அமைப்பு முறை, இதில் பல்வேறு நிலைகளில் உள்ள ஆவணங்கள் ஒன்றுக் கொன்று வழங்குகின்றவையாகவோ, தெடார்புடையவையாகவோ இருந்தால், இதனை மர அமைவு என்றும் கூறுவர்.

hierarchy : தெடார்புமுறை; படிநிலை; வழிமுறை : 1. ஒரு சூத்திரம் அல்லது அறிக்கை ஒன்றில் எண்களின் செயல்கள் அமைகிற வரிசை முறை Order of Operations என்பதைப் பார்க்க வும். 2. அடுக்குவரிசையில் அமைப்பு முறை.

hierarchy chart : படிநிலை வரைபடம் : ஒரு செயல்முறை தகவமைவுகள் அமைப்பாக்கத்தினை வரைபடமாகச் சித்திரித்தல். இது, பெருந்திட்டமிடுதலிலும், ஆவணமாக்கத்திலும் படுகைகளாகவுள்ள செயல் முறைப் பணிகளை காட்டுகிறது. இதனை மேல்கீழ் வரைபடம் என்றும் கூறுவர்.

hierarchy of operations : செயற்பாடுகளின் படிநிலை : கணிதச் செயற்பாடுகளை எந்த வரிசை முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதைக் காட்டும் விதிகளின் தொகுதி.

hierarchy plus input process output (HIPO) : தொடர் வரிசை மற்றும் உள்ளிட்டு வெளியீட்டு நடைமுறை (ஹிப்போ) : வடிவ மற்றும் நிரல் தொகுப்பு ஆவண முறை. அது செயல்முறை மற்றும் மூன்று வகையான வரை படங்களில் தரவுகள் வெளியாவதைக் குறிப்பிடுகிறது. நிரலாக்கத் தொகுப்பு கற்றைகளையும் அவற்றின் தொடர் வரிசை முறைகளையும் பாதி காட்டுகிற உள்ளடக்கப் பட்டியல். தொடர் வரிசையில் உள்ள உறுப்பினர்களுக்கான உள்ளிட்டு வகைப் படுத்துதல் மற்றும் வழங்கு தலை விவரிக்கிற வரைபடங்கள் மற்றும் விரிவான வரைபடங்கள். இவை மேலோட்டமான வரைபடங்களை குறிப்பான உள்ளீடு, வகைப்படுத்துதல் மற்றும் வெளியீடு விவரங்களை, விளக்கத்துடன் வெளியிடுகின்றன.

high bandwidth : உயர்நிலை அலைக்கற்றை; விரிந்த அலைக் கற்றை.

High-bit-rate Digital Subscriber Line : உயர்துண்மி வீத இலக்க முறை சந்தாதாரர் தடம் : தொலை பேசியின் சாதாரண செப்புக் கம்பி மூலமாகவே இலக்க முறைத் தரவு பரப்புக்கான ஒரு நெறிமுறை.

high byte : மேல் பைட் : இரண்டு பைட் அல்லது 16