பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

high order bit

698

high resolution graphics



high-order bit : உயர் நிலை துண்மி : ஒரு கணினியின் அடிப் படைச் சேமிப்பு அலகில் (Word) இடது ஒரமாகவுள்ள துணுக்கு.

high-order column : உயர் ஒழுங்கு நிரை; உயர் மதிப்பு நிரை : துளையட்டையின் பரப்பில் இடது ஒரத்திலுள்ள நிரை.

highpass filter : மேல்அலை வடிகட்டி; உயரலை சல்லடை : தரவு சமிக்கையில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு மேல் உள்ள அலைவரிசைகளை அனுமதிக்கும் ஒரு மின்னணு வடிகட்டி மின்சுற்று.

High Performance Serial Bus (1394) : உயர் செயல்திறன் நேரியல் பாட்டை : பீசி மற்றும் மெக்கின்டோஷ் கணினிகளுக்கான நேரியல் பாட்டை இடை முகம். வினாடிக்கு 100, 200, 400 மெகாபிட் தரவு பரிமாற்றம் சாத்தியம். 63 சாதனங்கள் வரை டெய்சிச் சங்கிலி அமைப்பில் இணைக்க முடியும். இவ்வாறு இணைக்கப்படும் சாதனங்கள் இடைமுகத்தின் வழியாக நேரடியாக மின்சாரத்தைப் பெற முடியும்.

high-persistence phosphor : கூடுதல் பாஸ்பரஸ் பூச்சு : கண்காணிப்புக் கருவியில் உள்ள திரைகளில் உள்ள பாஸ்பரஸ் பூச்சு, இயல்பான தொலைக்காட்சித் திரைகளில் உள்ள பூச்சுகளைவிடக் கூடுதலான நேரத்துக்கு உருவங்களை நிலைக்கச் செய்யக்கூடியது.

high pitch : உயர் தொனி.

high punch : உயர்துளை : பன்னிரு துளை அல்லது ஒய் (Y) துளை போன்றது.

high resolution : உயர்நுணுக்கத் தெளிவு; மிகைத் தெளிவு; அதி நுட்ப வரைமுறை : வெளியிடப்படும் விவரங்கள், துல்லியம் ஆகியவற்றின் அடிப்படையிலான தரம் தொடர்பானது. ஒரு பட வரைவு ஒன்றுக்குள் எத்தனை உரு உணர்த்தும் அலகுகள் உள்ளன என்பதைப் பொறுத்து படத்தின் தரம் அமைகிறது. படம் உணர்த்தும் அலகுகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகம் உள்ளதோ அத்தனைக்கு உயர் நுணுக்க விவரம் கூடுதலாக அமையும். உயர் நுணுக்க விவரம் கூடுதலான படங்கள் உயர் துணுக்க விவரம் குறைந்த படங் களைவிட தெளிவாக அமையும்.

high resolution graphics : உயர் செறிவு வரைகலை; அதிநுட்ப வரைமுறை கலை : பெரும்பாலான நுண் கணினிகள், புள்ளிகளையும், கோடுகளையும் செயல்முறை மூலம் வரைவதற்குரிய ஒரு வகை வரைகலை