பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Hoff. Ted

702

Hollerith code



சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப் பெயர்.

Hoff. Ted : ஹோஃப் டெட் : 1971இல் இன்டர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பொறியாளரான ம்ஹாஃப் முதல் குறும் நுண் செயலியை (4004) வடிவமைத்தார். அந்த ஒற்றைச் சில்லில் 2250 டிரான்ஸ்சிஸ்டர்கள் இருந்தன. ஒரு முழு மையச் செயலியின் எல்லாக் கருவிகளும் இருந்தன. இந்த குறும்சில் கணினித் தொழிலையும் அதன் விநியோகிப்பாளர்களையும் கணினியின் எதிர்காலப் பங்கு குறித்து சிந்திக்க வைத்தது.

hog : பன்றிப் பண்பு : முதன்மை நினைவகம் போன்ற கிடைக்கக் கூடிய ஆதாரங்களை மிகப் பெருமளவில் அல்லது தன்னந்தனியாகப் பயன்படுத்துகிற ஒரு செயல்முறை.

hold : பிடித்திரு.

holding time : பிடிமான நேரம் : ஒரு செய்தியை அனுப்புவதற்கு ஒரு செய்தித் தொடர்புச் சாதனம் பயன்படுத்தப்படும் காலஅளவு.

hold variable : பிடிமான மாறிலி : ஒரு மதிப்பளவினை இருத்தி வைத்துக் கொள்வதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு மாறிலி. எடுத்துக்காட்டு : கட்டுப் பாட்டுப் இடைமுறிவுத் தருக்க முறைக்காக முந்திய பதிவேட்டிலிருந்து மதிப்பளவினை இருத்தி வைத்தல்.

holes, procket : வழிப்படுத்து துளைகள்.

Hollerith card : ஹோலிரித் அட்டை : 80 செங்குத்து நிரைகளைக் கொண்ட துளையிடப் பட்ட அட்டை. ஒவ்வொன்றும் மேலிருந்து கீழாக 12 துளையிடு நிலைகளைக் கொண்டது. 80 எழுத்து, எண் தரவுகளை ஏற்கக் கூடியது. 90 செங்குத்து நிரைகள் மற்றும் 96 செங்குத்து நிரைகளைக் கொண்ட அட்டைக்கு மாறானது.

Hollerith code : ஹோலிரித் குறியீடு : துளையிடப்பட்ட அட்டைகளில் எழுத்து மற்றும் எண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான குறியீடு. ஹெர்மன் ஹோலிரித் என்பவரால் பெயரிடப்பட்டது. இவர் தான் துளையிடப்பட்ட அட்டை கணக்கீட்டு முறையை உருவாக்கியவர். ஒவ்வொரு அட்டை நிரையும் ஒரு எழுத்தைக் கொண்டது. ஒவ்வொரு பதின்ம எண்ணும் எழுத்தும், சிறப்பு எழுத்துகளும், ஒன்று, இரண்டு, மூன்று துளைகளால் குறிப்பிடப் படுகின்றன. இவை நிரையின்