பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Hollerith, ‘Herman

703

‘Hollerith tabulating



குறிப்பிட்ட வரிசை நிரல்களில் அமைக்கப்படுகின்றன.

Hollerith, Herman (1860-1929) : ஹோலரித். ஹெர்மன் (1860-1929) : புள்ளி விவர வல்லுநர் மற்றும் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு ஊழியர் என்ற வகையில், 1890ஆம் ஆண்டு கணக் கெடுப்பின்போது எளிமையான கூட்டல் மற்றும் வகைப்படுத்துதலுக்கு மின் எந்திரவியல் கருவிகள் மூலம் துளையிடப் பட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் முறையைப் பரிந்துரைத்தார். அவருடைய துளையிடப்பட்ட அட்டை கணக்கிடு கருவியை உற்பத்தி செய்ய அவர் அமைத்த நிறுவனம் ஐ. பி. எம். கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னோடி ஆனது.

Hollerith machine : ஹோலரித் எந்திரம் : முதலாவது தானியங்கித் தரவு பகுக்கும் சாதனம். இது 1890இல் அமெரிக்காவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை ஹெர்மன் ஹோலரித் என்பவர் கண்டுபிடித்தார். இது, கையினால் துளையிடும் அட்டையினையும், எண்ணுவதற்கு ஒர் அட்டவணைப்படுத்தும் எந்திரத்தையும் பயன்படுத்தியது. 1890இல் 10 ஆண்டுகளில் செய்திருக்கக்கூடிய பணியை, ஹோலரித் எந்திரத்தின் மூலம் ஈராண்டுகளில் முடிக்க முடிந்தது. இதனால், 50 இலட்சம் டாலர் மிச்சமாகியது. ஹோலரித் பின்னர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி தமது எந்திரத்தை உலகெங்கும் விற்பனை செய்தார். இந்நிறுவனம் 1911 இல் IBM நிறுவனமாக உருமாறியது.

Hollerith tabulating/recording machine : ஹோலரித் அட்ட வணையிடும்/பதிவுசெய்யும் எந்திரம் : 1800களின் பிற்பகுதியில் ஹெர்மன் ஹோலரித் கண்டுபிடித்த மின் எந்திரப் பொறி. குறிப்பிட்ட இடங்களில் துளையிடப்பட்ட அட்டைகளில் பதியப்பட்ட தரவுகளைச் செயலாக்கும் எந்திரம். துளைகளின் மூலமாக மின்சுற்று நிறைவடைந்து சமிக்கைகள் உருவாக்கப்பட்டு எண்ணுகின்ற மற்றும் அட்டவணையிடும் எந்திரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த எந்திரம் 1890ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை மூன்றில் இரண்டு பங்கு குறைத்தது. பின்னாளில் ஹோலரித், டேபுலேட்டிங் மெஷின் கம்பெனியைத் தொடங்கினார். 1911ஆம் ஆண்டு இந்தக்