பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hologram

704

home button



குழுமம் இன்டர் நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் (IBM) என்னும் புகழ்பெற்ற நிறுவனமாக உருவெடுத்தது.

hologram : முழுமைப் படிமம் : லேசர் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று வெட்டிக் கொள்வதால் மெல்லிய காற்றில் உருவாக்கப்படும் முப்பரிமாண உருவங்கள்.

holographic : முழுமைப் படிமச்சேமிப்பு : ஒரு படச்சுருளில் பெருமளவுத் தரவுகளைச் சேமித்து வைத்தல்.

holographic store : முழுப் படிமச் சேமிப்பி : ஒளிப்பட முறையில் சேமித்து வைத்தல்.

holography : முழுமைப் படிமவியல் : ஒரு சேமிப்பு ஊடகத்தில் பன்முகப் பரிமாண ஒளிப் படங்கள் எடுப்பதன்மூலம் தரவுகளைச் சேமித்துவைக்கும் உத்தி.

holy war : புனிதப் போர் : 1. கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம். (எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றியது அல்லது எண்களை இரும எண் முறையில் (Binary format) சிறு முடிவன்/பெரு முடிவன் முறையில் பதியும் முறை பற்றியது. 2. அஞ்சல் பட்டியல், செய்திக்குழு மற்றும் ஏனைய நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் உணர்வுபூர்வமான சர்ச்சைக்கிடமான பொருள் பற்றி நடைபெறும் விவாதம். (எ-டு) பாபர் மசூதி, வட அயர்லாந்து, கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்றவை. எடுத்துக் கொண்ட தலைப்புக்குப் புறம்பாகப் புனிதப் போருக்கு வழி வகுக்குமாறு கருத்துகளை முன் வைப்பது இணைய நாகரிகத் துக்கு (Netiguette) எதிரானது.

home : இல்லம்; தொடக்கம் : முனையத் திரை ஒன்றின் இடது புற மேல் மூலையில் உணர்த்து குறியீடு தோன்றும் துவக்க இடம்.

home address : இருப்பிட முகவரி : பன்முக வட்டு நினைவகத்தின் நேர்வுகளில், ஒவ்வொரு தடத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு புலம். இதில், அந்தத் தடத்திலுள்ள தரவுவை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் எழுத்து/படிப்பு முனைகளின் எண்ணும், நீள் உருளையின் எண்ணும் அடங்கியிருக்கும்.

home button : பிறப்பகக் குமிழ் : ஒரு கோப்பின் அல்லது ஒரு செயற்பாட்டுத் தொகுதியின் தொடக்கத்தைக் குறிக்கும் உருவப்படம்.