பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

home server

706

Hopper, Grace



விரல்களை ஒய்வாக வைக்கும் விசை வரிசை.

home server : முதன்மை வழங்கன்.

homogeneous : ஒரு படித்தான; ஒரு முகப்பட்ட

homogeneous environment : ஒரு படித்தான சூழல் : ஒரு நிறுவனத்துக்குள் ஒரே தயாரிப்பாளரின் வன்பொருளையும் ஒரே தயாரிப்பாளரின் மென்பொருள்களையும் பயன்படுத்துகின்ற ஒரு மென்பொருளாக்கச் சூழல்.

homogeneous network : ஒரு படித்தான பிணையம் : அனைத்து வழங்கன் கணினிகளும் ஒன்றுபோல இருந்து, ஒரேயொரு நெறிமுறையில் (protocol) இயங்குகின்ற கணினிப் பிணையம்.

homunculus : மூளையியக்கப் படிவம் : எண்ணற்ற, மீள் வளைவுகளைக் கொண்ட மூளையின் மாதிரி. செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவது.

Honeywell : ஹானிவெல் : கணினி கருவிகளைத் தயாரிக்கும் பெரிய நிறுவனம்.

hook : கொக்கி : செயல் வரைவுகளில், எதிர்கால விரிவாக்கத்திற்கான தருக்க முறை இடையீடுகள். இந்தக் கொக்கிகளை ஒரு சில புறவாலாயங்களை அல்லது செயற்கூறு வரவழைக்க மாற்ற லாம். அல்லது கூடுதல் செயல் விரைவுகள் சேர்க்கப்படும் போது சரியான இடத்தில் அமைக்கலாம்.

hooked vector : கொக்கியிட்ட அளவுச் சரம் : ஒரு சொந்தக் கணினியிலுள்ள (PC) அகப்படுத்தப்பட்ட இடையீடு. இடையீட்டு அளவுச் சர அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட இடையீட்டுக்கான சுட்டு முனை, அந்த இடையீட்டினைச் சீர் செய்வதற்காக ஒரு புதிய வாலாயத்திற்குத் தாவு மாறு மாற்றமைவு செய்யப்படுகிறது.

hookemware : தடையற்ற மென் பொருள் : மென்பொருளின் அதிக விரிவான பதிப்பினை வாங்குவதற்குப் பயனாளரை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள குறிப்பிட்ட எண் ணிைக்கையிலான அம்சங்களைக் கொண்ட தங்குதடையற்ற மென்பொருள்.

hopper : தத்தி.

hopper, card : அட்டைத் தத்தி.

Hopper, Grace : ஹோப்பர் கிராஸ் : கணித வல்லுநர், மார்க் -1 மற்றும் யுனிவாக் கணினிகளுக்கான நிரலாக்கத்