பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hot insertion

710

hot site



hot insertion : சூடாய்ச் செருகல் : ஒரு கணினி அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போதே ஒரு புறச் சாதனத்தை அல்லது விரிவாக்க அட்டைகளைச் செருகுதல். தற்காலத்திய புதிய மடிக் கணினியில் பீசிஎம்சிஐஏ கார்டுகளை இவ்வாறு செருக முடியும். உயர்நிலை வழங்கன் கணினிகளும் (servers) இத்தகைய செருகலை அனுமதிக்கின்றன. இதனால் இயங்காநேரம் குறைகிறது.

Hot Java : ஹாட்ஜாவா : சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஒர் இணைய உலாவி. வலைப் பக்கங்களில் உள்ளுறையும் ஜாவா பயன்பாடுகள் மற்றும் குறு நிரல்களை (applets) இயக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உலாவி.

hot key : தூண்டு விசை : கணினியில், தற்போது என்ன ஒடிக்கொண்டிருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு சில செயற்பணிகள் நிகழும்படி செய்கிற விசை அல்லது விசை களின் கூட்டு இணைப்பு. இது பொதுவாக, நினைவகத்தில் அமைந்திருக்கும் ஒரு செயல் முறையைத் தூண்டி விடுகிறது.

hot link : நேர் இணைப்பு : செயல் முறைகளிடையே முன்னரே வரையறுக்கப்பட்ட இணைப்பு. இதனால், ஒரு தரவு தளத்தில் அல்லது கோப்பில் உள்ள தரவுகள் மாற்றப்படும் போது, மற்ற தரவுத் தளங்களிலும், கோப்புகளிலுமுள்ள தொடர்புற்ற தரவுகளும் புதுப் பிக்கப்படுகின்றன.

hot list : சூடான பட்டியல் : பயனாளர் ஒர் இணைய உலாவி மூலம் அடிக்கடி பார்வையிடும் வலைப் பக்கங்களின் முகவரித் தொகுப்பு. பட்டியலிலிருந்து பயனாளர் விரும்பும் பக்கத்தை ஒரே சொடுக்கில் அணுக முடியும். இத்தகைய பட்டியல் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் மற்றும் லின்ஸ்க்கில் புத்தகக் குறி (Book mark) எனவும், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத் தளக் கோப்புறை (Favourites Folder) எனவும் வழங்கப்படுகிறது.

hot plugging : சூடான இணைப்பு : இயங்கிக் கொண்டிருக்கும்போதே ஒரு பொறியில் இன்னொரு புறச் சாதனத்தை இணைத்தல். கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போதே ஒரு விரிவாக்க அட்டை அல்லது இணக்கி, அச்சுப்பொறி போன்ற புறச் சாதனத்தைப் பொருத்துதல்.

hot site : முழுத் தளம்  : முழுமையான தயாரிப்புகளைக் கொண்ட கணினி மையம்.