பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hot spot

711

ΗΡFS



நெருக்கடி நிலையின்போது பயன்படுத்தத் தயார்நிலையில் இருப்பது.

hot spot : சுட்டு நுனி : சுட்டியைச் சொடுக்கும்போது பாதிக்கப்படுகிற ஒரு திரையின் மீது படக் கூறுகளின் துல்லிய மான அமைவிடம். எடுத்துக்காட்டு : ஒர் அம்புச் சுட்டு முனையின் நுனிப்பகுதி. ஒரு விரல் சுட்டு முனையின் நுனி.

hot wired : ஹாட் ஒயர்டு : ஒயர்டு இதழின் வலைத்தளம். இணையப் பண்பாடு குறித்த கிகசிசுக்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய தளம் முகவரி : http : //www. hotwired. com/frontdoor.

hot zone : வெம்மை மண்டலம் : சில சொல் பகுப்பிகளில் பயனாளர் வகைப்படுத்தும் பகுதி. பக்கத்தின் வலது விளிம்பில் தொடங்கி, பக்கத்தின் இடது பக்கத்தில் 7 இடைவெளிகள் வரை நீள்கிறது. அந்த வெப்பப் பகுதியில் ஒரு சொல் முடிவடைந்தால், அடுத்த எழுத்தை அடுத்த வரியின் தொடக்கத்தில் தானாகவே, முறைமை பொருத்துகிறது.

housekeeping : இல்லப் பராமரிப்பு; ஒழுங்கமைப்பு : விரும்பும் பயனைத் தர நேரடியாகப் பங்களிக்காத கணினியின் இயக்கச் செயல்கள். ஆனால் அவை நிரல் தொகுப்பு ஒன்றின் பகுதியாகும். செயல்முறையை தொடங்குதல் மற்றும், நூல் பராமரிப்பு எனும் இயக்கங்களை தூய்மைப்படுத்தும் செயல்கள் தேவையற்ற கோப்புகளை வட்டுச் சேமிப்பகத்திலிருந்து நீக்குதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

housekeeping tasks : துப்புரவுப் பணிகள் : ஒரு மென்பொருள் பயன்பாட்டினால் அல்லது செயற்பாட்டுப் பொறியமைவினால் செய்யப்படும் பின்னணிப் பணிகள். எடுத்துக் காட்டுகள் : தற்காலிகச் சேமிப்பு அமைவிடங்களுக்குத் தரவுகளைப் படித்தல் மற்றும் எழுதுதல்; கோப்புகளை உருவாக்குதல்; குறிப்பின்றி அணுகும் நினைவகத்தின் (RAM) பரப்புகளைத் துப்புரவாக்குதல்.

housing : உறை; கூடு : காபினெட் அல்லது பிற மேல்உறை.

HPFS : ஹெச்பீ. எஃப்எஸ் : உயர் செயல்திறன் கோப்பு முறைமை என்று பொருள்படும் High Performance File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒஎஸ்/2 இயக்க முறைமையின் 1. 2 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இருக்கும் கோப்பு முறைமை.