பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/719

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyper media

718

hypertalk



ஆவணத்திலுள்ள வேறோர் உறுப்பு அல்லது வேறொரு மீவுரை ஆவணம் அல்லது வேறொரு கோப்பு அல்லது உரைநிரல் (Script) இவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு. இத்தகைய தொடுப்புகள் பெரும்பாலும் நீல நிற எழுத்துகளில் (ஆவண எழுத்து நிறத்திலிருந்து மாறுபட்ட நிறத்தில்) அடிக்கோடிடப்பட்டிருக்கும். சுட்டிக் குறியை அருகில் கொண்டு சென்றால் கை அடையாளமாக மாறும். இந்த அடையாளங்களைக் கொண்டு அது ஒரு மீத்தொடுப்பு என்பதை அறியலாம். சுட்டியைக் கொண்டு தொடுப்பின்மீது சொடுக்கியதும், தொடுப்பில் சுட்டப்பட்டுள்ள ஆவணம் திறக்கும். எஸ்ஜி எம்எல், ஹெச்டிஎம்எல் போன்ற மீவுரைக் குறிமொழிகளில் உருவாக்கப்படும் மீவுரை ஆவணங்களில், பல்வேறு வகையான குறி சொல்கள் (tags) கொண்டு மீத்தொடுப்புகளைக் குறிப்பிடுகின்றன.

hyper media : மிகைத் தொடர்பு ஊடகங்கள் : ஒரு மிகையுரை முறைமையில் தரவு, உரை, வரைகலை, ஒளிப்படம், நகல் படம், ஒலி ஆகியவற்றைக் கூறுகளாகப் பயன்படுத்துதல். பல்வேறு தரவு வடிவங்கள் அனைத்தும், பயனாளர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாகச் சென்றிடும் வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

hyperPAD : மிகைத் திண்டு : "பிரைட் பில்-ராபர்ட்ஸ் கம்பெனி" என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான (PC) பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது மிகை அட்டை போன்ற செயல் முறை. இது உரை வடிவமுறையில் செயற்படுகிறது. இதில், PAD உரை வரி வடிவமொழி உள்ளடங்கியுள்ளது.

HyperScript : மிகை வரிவடிவம் : "WINGE" விரிதாள் தொகுப்புடன் வழங்கப்படும் ஒரு முன்னேறிய பெரும (வரிவடிவ) மொழி.

hyperspace : மீவெளி : வைய விரிவலையில் (WWW) மீத் தொடுப்புகளின் (Hyperlinks) மூலம் அணுகும்படியான மீவுரை ஆவணங்கள் அனைத்தின் தொகுப்பு.

hypertalk : மிகைபேச்சு : மிகை உரை / மிகைச் சாதனம் எழுதுவதற்கு அல்லது மரபான செயல் முறைப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்படும் மிகை அட்டைக் குரிய மொழி.