பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IC

723

ICMP


ஐபிஎம் தனியாள் கணினி

ஐபிஎம் தனியாள் கணினி

களுக்கு அடிப்படையாக விளங்கின. ஐபிஎம் வரையறுப்புகளின்படி அமைந்த கணினிகள் பீ. சி-ஒத்தியல்பிகள் PC-compatibles) என்று வழங்கலாயின.

IC : ஐ. சி. சில்லியல் : Integrated circuit என்பதன் குறும்பெயர். ஒரு எளிமையான பொருளில்-சாதாரணமாக ஒரு சிலிக்கன் சிப்புவில் அமைக்கப்பட்ட சிக்கலான மின்னணுவியல் இணைப்பு.

ICCAஇக்கா : Independent omputer Consultants Association என்பதற்கான குறும்பெயர்.

ICCE : ஐசிசிஇ : International council for Computers in Education என்பதற்கான குறும்பெயர்.

ICCP : ஐசிசிபி : Institute for Certification of Computer Professionals என்பதற்கான குறும்பெயர்.

ICE : ஐசிஇ : In Circuit Emulator என்பதன் குறும்பெயர். இயங்கும் நேரத்திலேயே அமைப்பு மென்பொருளில் உள்ள பிழைகளை நீக்க வடிவமைப்புவரை அனுமதிக்கும் சிறப்பு வன்பொருள் மற்றும் மென்பொருள்.

ICES : ஐசிஇஎஸ் : integrated Civil Engineering System என்பதற்கான குறும்பெயர். பொறியியல் சிக்கல்களுக்குத் தீர்வுகாண சிவில் பொறியாளர் களுக்கு உதவ உருவாக்கப்பட்ட முறைமை. பல பொறியியல் முறைமை களும் நிரல் தொகுப்பு மொழிகளும் கொண்டது.

ICIM : ஐசிஐஎம் : International Computer India Manufacturer என்பதற்கான குறும்பெயர். உலகம் முழுவதும் 83 நாடுகளில் இயங்கும் ஐசிஐஎம் நிறுவனங்களின் தொகுதியில் ஒன்று.

ICL : ஐசிஎல் : International Computers Limited என்பதற்கான குறும் பெயர். ஒரு பிரிட்டிஷ் கணினி உற்பத்தியாளர்.

ICMP : ஐசிஎம்பி : இணையக் கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை எனப் பொருள்படும் Internet Control Message Protocol