பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

identification

725

IDSL


வசதியும்,ஆவணப்படுத்தும் வசதியும் இதற்கு உண்டு. அதேவேளையில் புதிய இந்திய நிறுவனங்களின் சிறப்புத் தேவைகளை இது சமாளிக்கிறது. மோசமான தகவல் தொடர்புக் கம்பிகளுக்கிடையிலும் வெகுதொலைவில் உள்ள மாவட்ட நகரங்களுக்குச் செய்தியனுப்ப இது உதவுகிறது.

identification:அடையாளம் காணல்.

dentification division:அடைபாளப் பகுதி:அடையாளம் காணும் பிரிவு. கோபால் நிரலாக்கத் தொகுப்பின் நான்கு முக்கிய பகுதிகளில் முதலாம் பகுதி.

identification,file:கோப்பு அடையாளம் காணல்.

identifier:குறிப்பி:தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு.

identifier,lable:சிட்டை அடையாளம் காட்டி.

identity of server:வழங்கன் அடையாளம்:தலைமைக் கணினி அடையாளம்.

idiot box:அறிவிலிப் பெட்டி.

idle:செயலற்ற: 1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல் படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல்.

idle character:செயலற்ற எழுத்துகள்;முடங்கு உருக்கள்;செயலற்ற குறி :தரவு தொடர்பில்,உடனடியாக அனுப்ப வேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது,அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு.

idle interrupt:செயலற்ற குறுக்கீடு:ஒரு சாதனமோ அல்லது ஒரு செயலாக்கமோ செயலற்ற நிலையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு குறுக்கீடு.

idle time:செயலற்ற நேரம்:முடங்கு நேரம் பயன்படுத்த கணினி ஒன்று கிடைக்கும் நேரம். ஆனால் உண்மையில் பயன்படுத்தப்படாத நேரம்.

idle state:செயலற்ற நிலை:ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நிலை.

IDP:ஐடிபீ:Integrated Data Processing என்பதற்கான குறும்பெயர்.

IDSL:ஐடிஎஸ்எல்:இணைய இலக்க முறை சந்தாதாரர் தடம்