பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anchor cell

72

animated GIF



anchor cell : தாக்கு கலம் : விரி தாள் பயன்பாட்டில் ஒரு பணித் தாளில் காட்டி நிற்கும் கலம்.


AND : உம்மை : (a and b) என்பதன் பொருள், "ஏ" யும் "பி" யும் ஒரே நேரத்தில் உண்மையாக இருந்தால் மட்டுமே சொற்றொடர் உண்மையானதாக அமையும் என்பதாகும். இதனை 'தருக்கவியல்' உம்மை என்றும் கூறலாம்.


AND gate : உம்மை வாயில் : 1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளிடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆகும். உள்ளீடுகளில் ஏதாவது ஒன்று தருக்கம் சுழி (பூஜ்யம்) யாக இருந்தால் வெளியீடு கழி (பூஜ்யம்) யாக அமையும். 2. கணினி ஒன்றின் வாயில் மின் னிணைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளிட்டு முனையங்களைக் கொண்டது. எல்லா உள்ளீடுகளுக்கும் ஒரே நேரத்தில் துடிப்பு வழங்கப்படாவிட்டால் வெளியீட்டுச் சமிக்கை எதுவும் உருவாகாது.


AND operation : உம்மைச் செயல் : இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவற்றை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை’ என்று வர வேண்டுமென்றால் இரண்டும் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெளியிடு பொய் ஆகிவிடும்.


android : ஆண் மனிந்திரம் : மனிதர்களைப் போன்ற ஆண் தானியங்கு எந்திரம்.


angle bracket : கோண அடைப்புக் குறி.


angstrom : ஆங்ஸ்ட்ராம் : ஒளி அலை நீளளவை; நீட்டலளவை அலகு : 2. 5 சென்டி மீட்டரில் 1/25 கோடி. சிப்பு ஒன்றில் உள்ள மின்னணுவியல் கருவிகளில் உள்ள பாகங்களை அளக்கப் பயன்படுபவை.


ANI : அனி : Automatic Number Identification, என்பதன் சுருக்கம். தொலைபேசி அமைப்புகளின் ஒரு தன்மை அழைப்பவரின் எண்ணை கணினி அமைப்பின் மூலம் பெறுபவருக்கு அனுப்பி. அழைப்பவரை அடையாளம் காண உதவுவது.


animated cursors : அசைவூட்ட சுட்டுக்குறிகள் : இயங்கு இடங்காட்டி


animated GIF : அசைவூட்ட ஜிஃப்; இயங்கும் ஜிஃப், நகர் பட ஜிஃப் : வரைகலைப் படங்கள் கோப்புகளாக வட்டுகளில் பதியப்படும்போது பல்வேறு