பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IMACS

730


இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

IMACS : உருவங்கள்;பட உருக்கள் : International Mathematics And Computers Simulation என்பதற்கான குறும்பெயர். வல்லுநர்கள், கட்டடம் கட்டு வோர் மற்றும் இணை முறை மற்றும் கலப்பினக் கணினி முறைமைகளில் ஆர்வங்கொண்ட பயனாளர் இடையே அறிவியல்பூர்வமான தரவுகளைப் பரிமாறிக்கொள்ள உதவும் தொழில் முறை நிறுவனம்.

Image : உருவப்படம் : வேறு ஊடகம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படம் ஒன்றின் துல்லியமான காரண காரியப்படியான பிரதி. கணினியைப் பயன்படுத்துவோர் நினைவில் இருப்பதன் உள்ளடக்கத்தை கணினித் திரையில் வெளிப்படுத்தினால் நினைவில் இருப்பதன் படிவத்தைக் காண லாம். கணினி வரைபடத்தில், வரைபடக்கோப்பில் வரைந்திருப்பதைப் போன்ற வரைபடத் தரவுகளின் வெளிப்பாடு.

Image area : உருப்படப் பரப்பு.

image base visual serving : படிமத்தளப் புலக்காட்சி வழங்குகை.

image colour matching : படிம நிறப் பொருத்தம் : வருடப்பட்ட அல்லது உள்ளீடு செய்யப்பட்ட ஒர் படிமத்தின் நிறங்களை அப்படியே வெளியீடாகத் தருவதற்காகச் செய்யப்படும் திருத்தச் செயலாக்கம்.

image compression : படிம இறுக்கம் : ஒரு வரைகலை படிமக் கோப் பினைச் சேமிக்க தரவு இறுக்க நுட்பங்களைப் பயன்படுத்துதல். இறுக்கப் படாத வரைகலைக் கோப்புகள் சேமிப்பகத்தில் அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். எனவே, படிம இறுக்கம், சேமிப்பக இடத்தைச் சிக்கன மாகப் பயன்படுத்த உதவும்.

Image converter : உருப்பட மாற்றி.

image editing : படிமத் திருத்தம் : ஒர் படிமத் தொகுப்பானில் ஒரு பிட்மேப் படிமத்தை மாற்றுதல் அல்லது திருத்துதல்.

image editor : உருத்தோற்றத் தொகுப்பான்;படிமத் தொகுப்பான் : பிட்மேப் படிமங்களைத் திருத்தியமைத்துச் சேமிக்க வகைசெய்யும் பயன்பாட்டு நிரல். வருடுபொறியில் வருடப் பட்ட ஒளிப்படங்களை (photographs) வடிகட்டல் மற்றும் வேறுபல செயல்கூறுகள் மூலம்