பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/735

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Impact printer

734

. in



impact printer : அழைத்து அச்சுப்பொறி, தாக்க அச்சிடு கருவி : தரவு அச்சிடு கருவி உயர்த்தப்பட்ட அழுத்தம் காரணமாக விரைந்து உடனடியாக அச்சிடு கிறது. இதில் மையோ அல்லது நாடாவோ வண்ண ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. Daisy wheel printer, Line printer, Thimble printer systusmausananú பார்க்கவும். தாக்கமிலா அச்சிடு கருவிக்கு இது எதிரானது.

Impedance : மறிப்பு : ஓம்சில் அலகிடப்படும் குறிப்பிட்ட இடைவெளியில் பாயும் மாற்று முறை மின்சாரத்துக்கு ஒரு மின் இணைப்பில் ஏற்படும் மொத்த எதிர்ப்பு மற்றும் எதிர்வினை.

IMPLE : இம்பிள் : Initial Micro Programme Load என்பதன் குறும்பெயர்.

Implied address : மறைமுக முகவரி.

Implementation : அமல் : நடைமுறைப்படுத்தல் : கணினி முறைமை ஒன்றை நிறுவுவதில் கருவியைத் தேர்வு செய்தல், கருவியை நிறுவுதல், ஆட்களைப் பயிற்றுவித்தல், மற்றும் கணினி மையத்தின் இயக்கக் கொள்கைகளை ஏற்படுத்துதல் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன. 2. ஒரு குறிப்பிட்ட கணினி முறைமையில் ஒரு நிரல் தொகுப்பு மொழியின் பிரதிநிதித்துவம். 3. நிரல் தொகுப்பு ஒன்றை நிறுவுதல்.

impliment செய்முறைப்படுத்து : செயலாக்கு.

Implode : உள்திணி : ஒரு பெரிய சேர்ப்பியில் பாகங்களை இணைப்பது. ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரவுகளைச் சுருக்கு வதையும் இது குறிப்பிடும்.

Import இறக்குமதி : ஒரு தரவு முறைமைக்குள் மற்றொரு நிரலாக்கத் தொகுப்பில் உருவாக்கப்பட்ட கோப்பு ஒன்றைப் படித்தல். ஏற்றுமதிக்கு எதிரானது.

importing class : இறக்குமதி இனக்குழு.

impulse : கண உந்துகை.

IMS : ஐஎம்எஸ் : Information Management System என்பதன் குறும்பெயர். வரிசைப்படி அமைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் தரவுத் தள அடிப்படைகளில் தரவுகளைச் சேமிக்கவும் அவற்றை மீண்டும் பெறவும் வாய்ப்பளிக்கும் தரவுத்தள நிர்வாக முறைமை மற்றும் மென்பொருள் பொதி.

in : . இன்; . ஐஎன் : ஒர் இணைய தள முகவரி. இந்திய நாட்டைச்