பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

animated graphics

73

annotation symbol



தொழில்நுட்ப அடிப்படையில் பதியப்படுகின்றன. அவற்றுள் ஜிஃப் என்பது குறிப்பிட்டவடிவமைப்பைக் குறிக்கிறது.

வரைகலை மாறுகொள் வடிவாக்கம் (Graphics Interchange Format) என்பதன் சுருக்கமே GIF எனப்படுகிறது. இந்த வடிவமைப்பிலுள்ள வரைகலைப் படங்கள் வட்டுகளில் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. ஜிஃப் வடிவமைப்பில் அமைந்த வரைகலைப் பட உருவங்களை கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து திரையிடும்போது, அந்தப்படம் உயிரோட்டம் பெற்று இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.


animated graphics : அசைவுட்ட வரைகலை : இயங்கும் வரைபடங்கள் அல்லது கருத்துப் படங்கள். காந்த வட்டுகளில் வரை படங்கள் ஒளிக்காட்சி தோற்றங் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்ளும்.


animation : அசைவூட்டம் : நிகழ்வு ஒன்றின் தொடர் வரிசைப் படங்களை மிகவிரைவாக வெளிப்படுத்துவதன் மூலம் இயங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்குதல். இவ் வுத்தி, கணினி மூலம் திரைப் படங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.


animation picture : அசைவூட்டப் படம்.


animation window : அசைவியூட்டச் சாளரம்.


anion : எதிர்மின்மம் : மின்னுட்டத் திரவத்தில், நேர்மின் முனையை நோக்கி நகர்கிற ஒர் எதிர் அயனி (மின்மயத்துள்).


anisotropic : திசை மாறு பாட்டுப் பண்பு : அளவுக்கும் திசைக்குமேற்ப மாறும் அனுப்பு வேகம் போன்ற பண்புகளைக் குறிப்பிடுகிறது.


annexure : இணைப்பு.


anode : நேர்மின் முனை; நேர் மின்வாய் : மின்னணுவியலில் பயன் படுத்தப்படும் சொல். நேர் மின்னுட்டம் பெற்ற முனையை அல்லது மின்வாயை நோக்கி மின்னணு (எலெக்ட்ரான்) பாய்கிறது.


annotation : குறிப்புரை : சேர்க்கப்பட்ட விளக்கக் குறிப்பு.


annotation symbol : குறிப்புக் குறியீடு; விளக்கக் குறியீடு : தொடர் வரைபடம் ஒன்றில் செய்திகள் மற்றும் குறிப்புகளைச் சேர்க்கப் பயன்படுத்தப் படும் குறியீடு. மற்ற தொடர் வரைபடம் துண்டுக் கோடுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.