பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/746

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Information processing

745

Information revolution


கொள்ளக்கூடிய அல்லது கையாளக்கூடிய அளவுக்குமேல் ஒரு நபரிடம் தகவல் போய்ச்சேர்ந்தால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. இதனால் குழப்பமும் தகவல் பெற்றவர் செயல்பட முடியாத நிலையும் ஏற்படுகிறது.

Information processing : தகவல் வகை செய்தல்; தகவல் அலசல் : கணினி ஒன்றின் செயல்களின் முழுமை. மதிப்பீடு, ஆய்வு மற்றும் தகவல்களை வகைசெய்தல் ஆகியவற்றின் மூலம் பயனுள்ள தகவல்கள் தயாரிக்கப்படுகின்றன.

Information processing center : செய்தி வகைசெய்யும் மையம்; தகவல் அலசி ஆராயும் மையம் : Data Processing Center போன்றது.

Information processing curriculum : தகவல் வகை செய்யும் கல்வி : Data Processing Curriculum போன்றது.

Information providers : தகவல் அளிப்போர் : கணினி பிணைய பிணைப்புக்கு கட்டணத்துக்காக தகவல்களை வழங்கும் பெரிய வணிக நிறுவனங்கள். எடுத்துக்காட்டு Source or CompuServe.

Information quality : தகவலின் தரம் : ஒரு குறிப்பிட்ட பயனாளருக்குப் பயனளிக்கக்கூடிய வடிவம் உள்ளடக்கம் மற்றும் காலம் ஆகிய தன்மைகள் தகவலில் எந்த அளவு உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது.

Information reporting system : தகவல் அறிவிக்கும் அமைப்பு : குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தேவையின்பேரிலோ தேவையான அறிக்கைகள், காட்சிப் பொருள்கள், பதில்கள் ஆகியவற்றை அளிக்கும் மேலாண்மை தரவு அமைப்பு.

Information resource management : செய்தி வள மேலாண்மை; தகவல் ஆதார நிர்வாகம்; தொழிலாளி, மூலதனம் மற்றும் கச்சாப் பொருள் தகவல் ஆதாரங்களை நிர்வகிப்பதற்கான முறைமை.

Information retrieval : தகவல் பெறல்; தரவு மீட்பு : 1. சேமிப்பு மற்றும் பெருமளவு தகவல்களில் தேடல் மற்றும் தேர்வு செய்யப்பட்ட தகவல்களைக் கிடைக்கச்செய்தல். தொடர்பான தொழில் நுணுக்கங்கள் தொடர்புடைய கணினித் தொழில் நுணுக்கப் பிரிவு.

Information revolution : தகவல் புரட்சி : சமூகத்தில் கணினித் தொழில் நுணுக்கம் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்பொழுதைய ஊழிக்குத் தரப்