பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Information Thru' Speech

747

infrared port


பிழைகள், சப்தம், திரிவு ஆகியவைகளுக்குட்பட்ட வகையில் சரியாக வழங்குதல் தொடர்பான கல்வி.

Information Thru’ Speech (ITS) : பேச்சின் மூலம் தகவல் (ஐடீஎஸ்)  : அமெரிக்காவின் மேரிலாண்ட் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனம் உருவாக்கிய நுண் கணினி.

Information utility : தகவல் பயன்பாட்டமைப்பு.

information warehouse : தகவல் கிடங்கு : ஒரு நிறுவனத்தின் அனைத்துக் கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவு வளங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு.

information warfare : தகவல் போர்த் தாக்குதல் : எதிரி நாட்டின் பொருளாதார வாழ்வும் பாதுகாப்பும் பெரிதும் சார்ந்துள்ள கணினி நடவடிக்கைகள் மீதான தாக்குதல். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிலைகுலையச் செய்தல், பங்குச்சந்தை ஆவணங்களை பெருமளவில் பாழாக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

infrared : அகச்சிவப்பு : மின்காந்த நிறமாலையில் சிவப்பு ஒளிக்குச்சற்றே கீழான வரம்புக்குள் ஓர் அலைவரிசையைக் கொண்டுள்ள கதிர். பொருட்கள் தத்தம் வெப்ப நிலைக்கேற்ப அகச்சிவப்புக் கதிர்களை வெளியிடுகின்றன. வழக்கமாக, அகச்சிவப்புக் கதிர் வீச்சு அதன் அலைநீளத்தின் அடிப்படையில் நான்கு வேறுவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

infrared data association : அகச்சிவப்புத் தரவுச் சங்கம் : கணினிகளுக்கும் அவற்றின் புறச்சாதனங்களுக்கும் இடையே அகச்சிவப்புக் கதிர்மூலமான தகவல் தொடர்புக்குரிய தகவல் வரையறைகளை ஏற்படுத்தியுள்ள தொழில் நிறுவனங்களின் ஓர் அமைப்பு. இவை பெரும்பாலும் கணினி உதிரி உறுப்புகள் மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகும்.

infrared port : அகச்சிவப்புத் துறை : அகச்சிவப்புக் கதிர் உணரும் சாதனத்துடன் தொடர்பு கொள்ள ஒரு கணினியில் அமைந்துள்ள ஓர் ஒளியியல் துறை. இணைப்பு வடக்கம்பிகள் இல்லாமலே தகவல் தொடர்பு இயல்கிறது. தற்போதைக்கு சில அடி தொலைவுக்கே தொடர்பு ஏற்படுத்த முடிகிறது. மடிக்கணினிகள், கையேட்டுக் கணினிகள்,