பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/752

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inline function

751

input


inline function : உள்ளமை செயல்கூறு. சி++ மொழியில் உள்ளமை செயல்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

inline graphics : உள்ளமை வரைகலை : ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரைகலைக் கோப்புகள். ஹெச்டீஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடியும். தனியான கோப்புத் திறப்பு செயல்பாட்டினைத் தவிர்ப்பதன் மூலம், உள்ளமை வரைகலைப் படங்கள் ஹெச்டீஎம்எல் (HTML) ஆவணத்தை அணுகுதல் மற்றும் நினைவகத்தில் ஏற்றுதல் போன்ற செயல்பாடுகள் விரைவாக நடைபெறும்.

inline image : உள்ளமைப் படிமம் : ஓர் ஆவணத்தில் உரைப்பகுதியினூடே உள்ளமைக்கப்பட்ட ஒரு படிமம். வலைப்பக்கங்களில் இது போன்ற படிமங்களை அதிகம் காணலாம்.

Inline processing : உள்ளமை செயலாக்கம் : துவக்க நிலை சீர்செய்தல் அல்லது வகைப்படுத்தலுக்கு ஆட்படாமல் தன்னிச்சையான போக்கில் தரவுகளை வகைப்படுத்துதல்.

Inline subroutine : உள்ளமை துணை வாலாயம் : முதன்மை நடவடிக்கையில் தேவையான எண்ணிக்கையில் இடையில் செருகப்பட்ட துணை நடவடிக்கைக் குறிப்பு.

inner join : உள் இணைப்பு : உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணைகளை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும்முறை. இடப்புற அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகளும் அவற்றோடு உறவுடைய வலப்புற அட்டவணையிலுள்ள ஏடுகளும் விடையாகக் கிடைக்கும்.

Inner loop : உள்கொக்கி வளையம்.

Inoculate : நொயழிப்பு : நச்சழிப்பு : ஒரு நிரலாக்கத் தொடரில் தெரியாத நச்சுநிரல்கள் (வைரஸ்கள்) இருக்குமானால் கண்டுபிடித்து அதனைச் சேமித்து வைப்பது. கோப்புகளை மாற்றும்போது வைரஸ் புகுந்தாலும் இதில் கண்டுபிடித்து விடலாம்.

Input : உள்ளீடு : வெளியில் உள்ள சேமிப்பு ஊடகம் ஒன்றிலிருந்து தகவல்க்ளை கணினியின் உள்சேமிப்புப் பிரிவுக்கு வழங்குதல். வெளியீட்டிலிருந்து மாறுபட்டது.