பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/753

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

input area

752

input/output buffer


Input area : உள்ளீட்டுப் பகுதி : உள்ளிட்டுத் தகவல்களை சேமிக்க ஒதுக்கப்பட்டபகுதி. வெளியீட்டுப் பகுதிக்கு எதிரானது.

input bound : உள்ளீட்டு வரம்பு/எல்லை.

input buffer : உள்ளீட்டு இடையகம் : ஒரு கணினிக்குள் உள்ளீடாகச் செலுத்தப்படும் தகவல் களைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்கென கணினி நினைவகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பகுதி.

Input data : உள்ளீட்டுத் தரவு : சீர் செய்யப்படவேண்டிய தரவுகள் வெளியீட்டுத் தரவுகளுக்கு எதிரானது.

Input device : உட்பாட்டுச் சாதனங்கள், உள்ளிட்டுக் கருவி;உள்ளிட்டுச் சாதனங்கள் : மனிதர்கள் கையாளக்கூடிய சாதனங்களிலிருந்து மத்திய செயலகப் பகுதிக்கு தகவல்களைத் தரக் கூடிய கருவி. எடுத்துக்காட்டு : அட்டை வாசிப்பி, நாடாப் பதிவு, விசைப் பலகை முனையம், மின்காந்த நாடாப் பிரிவு.

input job stream : உள்ளீட்டுப்பணித் தாரை;உள்ளிட்டுப் பணியோட்டம்.

input mask : உள்ளீட்டு மறைப்பு.

Input material : உட்பாட்டுப் பொருள்.

Input media : உள்ளீட்டு ஊடகம் : தரவுகள் பதிவு செய்யப்படுகிற பகுப்பொருள்கள். எடுத்துக்காட்டு : சிறு தகடுகள், மின்காந்த நாடா, துளையிடப்பட்ட அட்டை, எம்ஐசிஆர் ஆவணங்கள் மற்றும் ஒசிஆர் ஆவணங்கள், வெளியீட்டு ஊடகம் மற்றும் ஆதார ஊடகம் ஆகியவற்றை ஒப்பிடவும்.

Input/output (I/O) : உள்ளீடு/வெளியீடு : மனிதர்களுக்கும் எந்திரங் களுக்கும் இடையிலான தகவல் தொடர்பை அடைவதற்கான உத்தி, ஊடகம் மற்றும் கருவி.

Input/output bound : உள்ளீடு/வெளியீடு இறுக்கம் : உள்ளிட்டு/வெளியீட்டு நடவடிக்கைகள் காரணமாக மத்திய சீர்படுத்தும் பிரிவின் நடவடிக்கைகள் தொய்வடையும் சூழ்நிலை தொடர்பானது. உள்ளிட்டு/வெளியீட்டு நடவடிக்கைகள் பொதுவாக மையச்செயலகப் பிரிவின் உள் சீர்படுத்தும் நட வடிக்கைகளுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் தாமதமாக உள்ளன.

input/output buffer : உள்ளீட்டு/வெளியீட்டு இடையகம் : ஒரு கணினியில் உள்ளீடாகத் தரப்படும் தரவுகளையும், வெளியீடாகப் பெறப்படும் தரவு