பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/754

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

input output bus

753

Input/output device


களையும் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக நினைவகத்தில் ஒதுக்கப்படும் ஒரு பகுதி. மையச் செயலி நேரடியாக உள்ளீட்டு/வெளியீட்டு சாதனங்களுடன் தரவு பரிமாற்றம் மேற்கொண்டால் செயலியின் பொன்னான நேரம் வீணாகிப் போகும். இடைநிலை நினைவகத்தில் எழுதி விட்டு செயலி வேறு பணியை மேற்கொள்கிறது என்பதால் அதன் நேரம் பயனுள்ள முறையில் செலவாகிறது.

input output bus : உள்ளீட்டு/வெளியீட்டுப் பாட்டை : ஒரு கணினியின் உள்ளமைப்பில் மையச் செயலிக்கும் பிற உள்ளீட்டு, வெளியீட்டுச் சாதனங் களுக்குமிடையே தரவுகளைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத் தப்படும் வன்பொருளாலான மின்வழித் தொகுதி.

Input/output channel : உள்ளீட்டு/வெளியீட்டு வழித்தடம் : உள்ளீட்டுத் தடம் தரவுகளை கணினியிலிருந்து வெளியீட்டு தரவுகளாக வழங்குகிற வழித் தடம்.

input/output controller : உள்ளீட்டு/வெளியீட்டுக் கட்டுப் படுத்தி : ஒரு கணினியில் உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனங்களுக்கும் மையச் செயலிக்கு மிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகின்ற மின்சுற்று அமைப்பு. உள்ளீட்டு/வெளியீட்டுப் பணிகளை மேற்பார்வையிட்டுத் தரவுவைப் பெறுதல், வெளிடுதல் ஆகிய செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டு, செயலியானது தன் நேரத்தைப் பிற பணிகளில் ஈடுபடுத்துவதற்கு உதவி செய்கிறது. நிலைவட்டு இயக்ககக் கட்டுப்படுத்திகளை (Hard Disk Drive Controllers) எடுத்துக்காட்டாகக் கூறலாம். பல கட்டுப் படுத்திகளுக்கு தரவுவைப் பெற்றுக் கையாள்வதற்கு மென்பொருள் தேவைப்படுகிறது. இவற்றை சாதனக் கட்டுப்படுத்தி, உ/வெ கட்டுப்படுத்தி என்றும் அழைப்பர்.

Input/Output Control System (locs) : உள்ளீட்டு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டு முறைமை : உள்ளீட்டு/வெளியீட்டு நடவடிக்கைகளின் விரிவான அம்சங் களைக் கட்டுப்படுத்துகிற, அந்நடவடிக்கைகளை துவக்குகிற வழமையான நடவடிக்கைகளின் தொகுப்பு.

Input/output device : உள்ளீட்டு/வெளியீட்டுக் கருவி : மனிதர்கள் கையாளும் சாதனத்திலிருந்து மத்திய சீர்செய்யும் பிரிவுக்கு தரவுகளைப் பெற்றுத்