பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/755

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Input/output instructions

754

input/output unit


தரும் பிரிவு. மற்றும் கணினியின் உள் சேமிப்பிலிருந்து மற்றொரு சேமிப்புக்கு அல்லது வெளியீட்டுக் கருவிக்குத் தரவுகளை மாற்றுகிற கருவி. உள்ளீட்டுக் கருவி, வெளியீட்டுக் கருவி, புறவளைய கருவி ஆகியவற்றைப் பார்க்கவும்.

Input/output instructions : உள்லீட்டு/வெளியீட்டு ஆணைகள் : புறநிலைக் கருவிகள் மற்றும் முக்கிய சேமிப்புக்கு இடையே தரவுகளைப் பரிமாறுவதற்கான ஆணைகள். இவை மைச் செயலியுடன் இணைந்துள்ள புறநிலைக் கருவிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

Input/output interface hardware : உள்ளீடு/வெளியீடு இடைமுக வன்பொருள் : உள்ளீடு/வெளியீடு துறைகள், (போர்ட்டுகள்) தடங்கள், தாங்கிகள், வழித்தடங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள் போன்ற சாதனங்கள், உள்ளீடு/வெளியீடு வேலை ஒதுக்கீடுகளைச் செய்ய மையச் செயலகத்துக்கு உதவுகின்றவை. இந்த சாதனங்கள் மூலம் ஒரே நேரத்தில் உள்ளீடு, வெளியீடு மற்றும் செயலாக்கப் பணிகளை நவீன கணினிகளில் செய்ய முடிகிறது.

input/Output (I/O) Port : உள்ளீட்டு/வெளியீட்டுத் துறை அல்லது வாயில் : கணினியில் அமைக்கப்பட்டு தரவு துண்மிகளைப் பெறவும், அனுப்பவும் பயன்படும் ஒரு குறிப்பிட்ட சாதனத்துடன் இணைக்கப்பட்ட தனித்த முகவரியிடப்படும் இருப்பிடம்.

Input/output processor : உள்ளீட்டு/வெளியீட்டு செயலி : துணை சீர் செயலி-உள்ளிட்டு/வெளியீட்டு மாற்றங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உள்ளீட்டு/வெளியீட்டுப் பணிகளுக்காக மையச் செயலகப்பிரிவை விடுவிக்கிறது.

input/output statement : உள்ளீட்டு/வெளியீட்டுக் கூற்று : நினை வகத்துக்கும், உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனத்துக்கும் இடையே தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு நிரலில் பயன்படுத்தப்படும் கட்டளை.

Input/output symbol : உள்ளீட்டு/வெளியீட்டு குறியீடு : இணை சதுர வடிவ தொடர் பட்டியல் குறியீடு. இது ஒரு நடைமுறைக்கான உள்ளீட்டு நடவடிக்கையைக் குறிப்பிடுகிறது அல்லது ஒரு நடைமுறை ஒன்றின் வெளியீட்டு நடவடிக் கையைக் குறிப்பிடுகிறது.

input/output unit : உள்ளீட்டு/வெளியீட்டுப் பகுதி.