பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/757

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

insert

756

insight


insert:செருகு.

insert file:கோப்பைச் செருகு.

Insertion:இடையிடல்;இடைச்செருகல்.

insertion method:செருகு முறை.

insertion mode:இடையீடு செய்யும் நிலை.

Insertion point:செருகு இடம்:ஆவணம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பதிவு செய்யும் இடம்.

insertion sort:செருகு வரிசையாக்கம்:பல்வேறு வரிசையாக்க முறைகளுள் ஒன்று. வரிசையாக்க வேண்டிய ஒரேயொரு உறுப்பினை முதலில் எடுத்துக்கொண்டு இந்த வரிசையாக்க முறை தொடங்கப் படுகிறது. இரண்டாவது உறுப்பினை எடுத்து,முதல் உறுப்பினைவிடப் பெரிதா,சிறிதா எனப்பார்த்து முன்னாலோ அல்லது பின்னாலோ இணைக்க வேண்டும். அடுத்த உறுப்பினை எடுத்து,வரிசையாக்கப் பட்டியலில் பொருத்தமான இடத்தில் செருக வேண்டும். இவ்வாறு ஒரு நேரத்தில் ஒர் உறுப்பினை மட்டும் எடுத்துக் கொண்டு பட்டியலில் அதற்குரிய இடத்தில் செருகி எவ்வளவு பெரிய வரிசையாக்கப் பட்டியலையும் உருவாக்க முடியும். குவித்து வைக்கப்பட்டுள்ள சீட்டுக் கட்டில் ஒவ்வொரு சீட்டாக எடுத்துக் கையில் வரிசையாக அடுக்கும் முறையை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். கோவைகளை(Arrays)பொறுத்த மட்டில் இம்முறை திறனற்றது. ஏனெனில்,ஒவ்வொரு உறுப்பினைச் செருகும்போதும் பிற உறுப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தொடுப்புப் பட்டியல்களுக்கு(Linked Lists)இந்த முறை மிகவும் ஏற்றது.

Insert key(INS Key):இஎன்எஸ் விசை:Insert key என்பதன் குறும்பெயர். உள்நுழைத்தல் மற்றும் மேலே முதல் முறைகளுக்கிடை யிலோ தற்போதைய சுட்டி(கர்சர்)இருப்பிடத்தில் ஒரு பொருளை நுழைப்பதற்கு பயன்படுத்தும் விசை.

insert menu:செருகு பட்டியல்:.

Insert mode:இடைச் செருகும் முறை:திரையில் நடப்பு சுட்டி(கர்சர்) இருப்பிடத்தில் வேறொன்றை நுழைக்க புதிய தரவுகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் தரவு நுழைவு முறை.

insert page:ஈடைச் செருகு பக்கம்;பக்கத்தைசெருகு.

insight:உள்ளொளி;உள் பார்வை;அகப்பார்வை.