பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/762

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Instruction time

761

integer attribute


Instruction time : ஆணை நேரம்;கட்டளை நேரம் : உள் சேமிப்பிலிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவினால் கட்டளை ஒன்றைப் பெறவும் அதனை உணரவும் தேவைப்படும் நேரம். இதனை I-time என்று பெரும்பாலும் கூறுவதுண்டு. Instruction cycle என்பதோடு ஒப்பிடவும்.

instruction, unconditional branch : நிபந்தனையற்ற கிளை பிரி ஆணை.

Instruction word : ஆணைச் சொல்;கட்டளைச் சொல் : கட்டளையை உள்ளடக்கிய கணினிச் சொல்.

Instrument : கருவி : கோரிக்கையின் பேரில் தனிப்பட்டவர்களுக்கோ ஒரு நிறுவனத்துக்கோ தரவுகளை வழங்க, அவற்றைச் சேகரிக்க திட்டமிட்ட நடைமுறையில் பயன் படுத்துவதற்குப் படிவம், அறிக்கை, வினாத் தொகுப்பு, அல்லது வழிகாட்டி வடிவத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணம்.

Instrumental input : எந்திர உள்ளீடு : எந்திரங்களினால் சேகரிக்கப்பட்டு நேரடியாக கணினியில் பொதியப்பட்ட தரவுகள்.

instrumentation : கருவிகளைக் கையாளுதல் : அளத்தல், பதிவுசெய்தல். இயற்பியல் பண்புகளை மற்றும் அசைவுகளை அளத்தலுக்குக் கருவிகளைக் கையாளுதல்.

instrument, input : உள்ளீட்டுக் கருவி.

insulator : மின்விலக்கி : 1. ரப்பர், கண்ணாடி, பீங்கான் போன்று மின்சாரத்தை அரிதில் கடத்தும் (அல்லது கடத்தாத) பொருட்களை மின் விலக்கிகள் என்கிறோம். 2. ஒரு மின்சுற்றில் மின்சாரம் தவறான பாதை யில் பாயாமல் இருக்கும் பொருட்டு இரு உறுப்புகளுக்கிடையே காப்பாகப் பயன் படுத்தப்படும் கருவி. 3. மிக உயர்ந்த மின்பரப்புக் கோபுரங்களில் உயர் மின்னழுத்தக் கம்பிகளிலிருந்து மின்சாரம் பாயாமல் இருக்க களிமண்/பீங்கான் மின்விலக்கிகள் பயன்படுத்தப் படுகின்றன.

Integer : முழு எண் : முழு எண்களையும் அவற்றின் எதிர் மறை களையும் கொண்ட எண் தொகுப்பு. எடுத்துக்காட்டுகள் : -24;-1, 0, 1, 2, 13, 128.

integer array : முழுஎண் கோவை.

integer attribute : முழுஎண் பண்புக் கூறு.