பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/767

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Intelligent database

766

Intelligent software


Intelligent database : அறிவார்ந்த தரவுத் தளம் : தன்னுடைய தரவுவின் உள்ளடக்கத்தைப்பற்றி அறிந்துள்ள தரவுத்தளம். ஒவ்வொரு தரவுப் புலத்திலும் மதிப்பளிக்கும் அளவுகோல்கள் சேமித்து வைக்கப்படும். அனைத்து நுழைவுகளின் பட்டியல் அல்லது குறைந்த மற்றும் அதிக மதிப்புகள் ஆகியவை இதில் குறிப்பிடப்படும்.

intelligent device : நுண்ணறிவு சாதனம்; அறிவார்ந்த சாதனம்.

Intelligent form : அறிவார்ந்த படிவம் : சரியான தரவுவை நுழைக்க உதவும் உதவி, திரைகள் மற்றும் குறைந்த அளவு செயற்கை நுண்ணறிவினை வழங்குகின்ற தரவு நுழைவு பயன்பாடு.

Intelligent hub : அறிவார்ந்த குவியன் : இணையத்திலுள்ள சமிக்கைகளை மீட்டுருவாக்கல், இணைய மேலாண்மைக்கான அனுப்புதல்களைக் கண்காணித்தல், பல வகையான கேபிள்களுக்கு இணைப்புகளை அனுமதித்தல் மற்றும் வழியமைத்துத் தருதல் போன்ற பல்வகைப் பணிகளை இது ஆற்றுகிறது.

Intelligent language : அறிவார்ந்த மொழி : நிரலாக்கத்தொகுப்பை உருவாக்கியவர் அல்லது பயன்படுத்துகிறவர் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய அல்லது மாற்றக்கூடிய நிரலாக்கத் தொகுப்பு மொழி.

Intelligent modem : அறிவார்ந்த மோடெம் : நேர்முக அனுப்புதல் நடைபெறும்போதே புதிய ஆணைகளை ஏற்று கட்டளைகளுக்கு இசையும் மோடெத்தை, ஹேயஸ் என்பவர் முதலில் உருவாக்கினார்.

Intelligent robots : அறிவார்ந்த எந்திர மனிதர்கள் , அறிவார்ந்த எந்திரன்கள் : அறிவார்ந்த எந்திர மனிதனுக்கு நிரலாக்கத் தொடரமைக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், தன்னுடைய சூழ்நிலையை அறிந்து கொண்டு பல்வேறு வெளிப்புற சூழ்நிலைகளுக்கேற்ற அறிவார்ந்த செயல்களை எந்திர மனிதன் செய்ய இது உதவுகிறது.

Intelligent software development tools : அறிவார்ந்த மென்பொருள் வளர்ச்சிக் கருவிகள் : மென்பொருள் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உற்பத்தித்திறனை அதிகரிக்க மென்பொருள் வளர்ச்சிக் கருவிகள் என்று அழைக்கப்படும் சிறப்பு நிரலாக்கத் தொடர்களை நிர லாக்கத் தொடர் அமைப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள்.