பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/770

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Interactive programme

769

Interactive video



தொடர்ந்த தகவல் தொடர்பு மூலம் தரவுகளை மாற்றுதல், கட்டளைகளை மாற்றுதல் ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன. Conversational mode மற்றும் transaction oriented processing என்பதைப் பார்க்கவும்.

Interactive programme : இடை பரிமாற்ற நிரல் தொகுப்பு; இடை வினைச் செயல்படுத்துதல் : தரவுகள் பதிவு செய்யப்பட அல்லது தரவுகள் தொடர அல் லது நிரல் தொகுப்பை அதனை நிறைவேற்றும்போதே மாற்றி அமைக்க அனுமதிக்கும் கணினி நிரல் தொகுப்பு.

Interactive programming : இடைப் பரிமாற்றச் செயல் முறைப்படுத்தல்.

Interactive query : இடைப் பரிமாற்ற வினா; ஊடாடு உசாவல் : ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை அல்லது ஆவணங்களை உடனடியாகத் திரும்பப் பெற உதவும் நடவடிக்கை. இயல்பாகப் பயனாளரின் ஒவ்வொரு உள்ளிட்டுக்கும் முறைமையிடமிருந்து ஒரு எதிர் வினையைத் தரும் தொடர்பு.

Interactive session : இடைப் பரிமாற்ற நிகழ்ச்சி : பயன் படுத்துபவருக்கும் கணினிக்கும் இடையில் முன் பின்னான உரையாடல். Batch session என்பதன் எதிர்ச்சொல்.

Interactive system : இடைப் பரிமாற்ற முறைமை : பயனாளரோ , கணினியின் சாதன சேவைப் பகுதியோ இயக்க நிரல் தொகுப்புடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். பயனாளர் இதனை உரையாடல் முறைமை என்று கூறுவார்கள்.

interactive television : ஊடாடு தொலைக்காட்சி : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்வையாளர் ஊடாட வகைசெய்யும் ஒரு ஒளிக் காட்சித் தொழில்நுட்பம் (Video Technology). இணையத் தொடர்பு, நேயர் விருப்ப ஒளிக்காட்சி (Video on demand), ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் (Video Conference) போன்றவை ஊடாடு தொலைக் காட்சியின் சில பயன்பாடுகளாகும்.

Interactive video : இடைப் பரிமாற்ற ஒளிக்காட்சி; ஊடாடு ஒளிக்காட்சி : சொற்கள், குரல், ஒளி பரிமாற்ற தொழில் நுட்பங்களுடன் உருவ செயலாக்கத்தை ஒருங்கிணைக்கும் கணினி சார்ந்த அமைப்பு. இடைப் பரிமாற்ற பல் ஊடக முறையில் வழங்குவதை இது