பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/771

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

interactive video disk

770

interface



இயல்பாக்குகிறது. கணினி கட்டுப்பாட்டில் வீடியோ டிஸ்க் அல்லது சிடி ரோமை பயன்படுத்தி இடைப்பரிமாற்றக் கல்வி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அளிப்பது.

interactive video disk : இடை பரிமாற்ற ஒளிக்காட்சி வட்டு; ஊடாடு ஒளிக் காட்சி வட்டு.

Interaction : திரும்பச் செய்தல் : மறுபடி மறுபடி செய்தல்.

interapplication communication : பயன்பாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு : ஒரு நிரல் இன்னொரு நிரலுக்குச் செய்தி அனுப்பும் செயல்பாடு. (எ-டு) சில மின்னஞ்சல் நிரல்கள், பயனாளர் அஞ்சலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே அதில் குறிப்பிட்டுள்ள ஒர் இணையத்தளத்தைச் சொடுக்கிப் பார்வையிட அனுமதிக்கின்றன. பயனாளர் சொடுக்கியதும், இணைய உலாவி அக்குறிப்பிட்ட இணையத் தளத்தை தானாகவே பெற்றுத்தருகிறது.

Interbase : இடைமுகம்; இடை முகப்பு : போர்லாண்ட் நிறுவனத்தில் உறவுமுறை டி. பி. எம். எஸ். நேர்முக கலவை செயலாக்கங்களைக் (online complex processing) கையாள வடிவமைக்கப்பட்ட இது யூனிக்ஸ் பணி நிலையங்களிலும் லேக்ஸ்களிலும் இயக்கப்படுகிறது. பியர்-டு-பியர் மற்றும் கிளயன்ட்/ செர்வர் அமைப்புகளாகவும் இது இருக்கலாம். எஸ்கியூஎல்-யும் மற்றும் அதனுடைய சொந்தத் தரவு கையாளும் மொழியையும் இது பயன்படுத்துகிறது.

Inter Block Gap : (IBG) : தொகுதி இடைவெளி; தொகுப்பிடைத் தூரம் : மின்காந்த நாடா, வட்டு அல்லது உருளையில் ஒரு ஆவணத் தொகுப்பின் முடிவுக்கும் அடுத்த ஆவணத் தொகுப்புக்கும் இடையில் உள்ள தூரம். கோப்புத் தூரம் மற்றும் ஆவன இடைத்தூரத்திலிருந்து மாறுபட்டது.

inter connected network : சேர்த்தினைப் பிணையம்.

inter connected ring : சேர்த்திணைப்பு வளையம்.

Interconnection : இணைப்பு : பல விற்பனையாளர்கள் வழங்கிய சாதனங்களுக்கிடையிலான இணைப்பு.

Interface : இடைமுகப்பு : ஒரு கணினியும், வெளிப்புற பொருள் ஒன்றும் சந்திக்கும் இடம். அந்த வெளிப்புறப் பொருள் இயக்கியாகவோ, வெளிப்புறச் சாதனமாகவோ