பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/779

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Internet broadcasting

778

Internet Engineering



நடத்தி வருகின்றனர் (எ-டு) எம்சிஐ, ஸ்பிரின்ட், இந்தியாவில் விஎஸ்என்எல் மற்றும் தொலை தொடர்புத்துறை (பிஎஸ்என்எல்) முதுகெலும்புப் பிணையங்களை நிறுவியுள்ளன.

Internet broadcasting : இணைய அலைபரப்பு : இணையம் வழியாக கேட்பொலி (Audio) மற்றும் ஒளிக் காட்சி (Video) தரவுகளைப் பரப்புதல். இது வலைபரப்பு (Webcasting) என்றும் அழைக்கப்படுகிறது. இணைய அலைபரப்பு என்பது வழக்கமான வானொலி நிலையங்கள் இணையம் வழியாக ஒலிபரப்புச் செய்வதையும் உள்ளடக்கியதே. இணையத்தில் மட்டுமே ஒலிபரப்புச் செய்யும் நிலையங்களும் உள்ளன. இணையம் வழி ஒலிபரப்பாகும் பாடல்களை ரியல் ஆடியோ (Real Audio) என்னும் மென் பொருள் உதவியுடன் கேட்கலாம். ஒளிக்காட்சி அலை பரப்பை ரியல் பிளேயரில் காணலாம். எம்போன் (MBONE) என்பது இணைய அலை பரப்பில் ஒரு முறை.

Internet browser : இணைய உலாவி.

Internet business : இணைய வணிகம்.

Internet call : இணைய அழைப்பு.

Internet connection : இணைய இணைப்பு.

Internet connection wizard : இணைய இணைப்பு வழிகாட்டி.

Internet draft : இணைய நகலறிக்கை : இணையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தர வரையறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐஇடீஎஃப். (IETF-Internet Engineering Task Force) தயாரித்து முன்வைத்த ஒர் ஆவணம். எந்த நேரத்திலும் இதனைத் திருத்தலாம்; மாற்றலாம். திருத்தமோ மாற்றமோ இல்லையெனில் ஆறுமாத காலத்துக்கு இந்த ஆவணம் செல்லுபடி ஆகும். ஒர் இணைய நகலறிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் எனில், அதனை ஒர் ஆர்எஃப்சியாக (RFC-Request for Comment) மேம்படுத்தலாம்.

Internet directory : இணைய தரவுத் தொகுப்பு.

Internet Engineering Steering Group : இணையப் பொறியியல் வழி காட்டும் குழு : இணையக் கழகத்தின் (Internet Society-ISOC) உள்ளேயே ஐஏபியுடன் (Internet Architecture Board) இணைந்து,