பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/780

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Internet Explorer

779

Internet Information Server



இணையப் பொறியியல் முனைப்புக் குழு (IETF-Internet Engineering முன்வைக்கும் தர வரையறைகளை மதிப்பாய்வு செய்யும்.

Internet Explorer : இன்டர்நெட் எக்ஸ்புளோரர் : மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1995ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்திய இணைய உலாவி மென்பொருள். விண்டோஸ் 95/98/எம்இ/என்டி/2000 மற்றும் மெக்கின்டோஷ் முறைமைகளில் செயல்படும் பதிப்புகள் பயன்பாட்டில் உள்ளன. பிந்தைய பதிப்புகள், வலைப் பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ள மேம்பட்ட வடிவமைப்பு நுட்பங்கள், அசைவூட்டக் கூறுகள், ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள் மற்றும் ஜாவா குறுநிரல்களை அடையாளங்கண்டு செயல்படுத்தும் வல்லமை பெற்றவை.

Internet gateway : இணைய நுழைவி; இணைய நுழை வாயில் : ஒர் இணைய முதுகெலும்புப் பிணையத்துடன் இன்னொரு பிணையத்தை இணைப்பதற்கு உதவும் சாதனம். பெரும்பாலும் இத்தகைய சாதனம் இப்பணிக்கென தனித் தொதுக்கப்பட்ட ஒரு கணினியாகவோ, ஒரு திசைவி (Router) யாகவோ இருக்கும். இணைய முதுகெலும்புப் பிணையத்திற்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பிற பிணையங்களுக்கும் இடையேயான நெறிமுறை நிலைமாற்றம் (Protocol Conversion), தரவு மொழிபெயர்ப்பு மற்றும் செய்திப் பரிமாற்றங்களை இந்த நுழைவிகள் கவனித்துக் கொள்கின்றன. ஒரு நுழைவி இணையத்தில் ஒரு கணுவாகக் (Node) கருதப்படுகிறது.

internet group membership protocol : இணையக் குழு உறுப்பினர் நெறிமுறை : ஐபீ புரவன்கள் (IP hosts) பயன்படுத்தும் ஒரு நெறிமுறைத் தொகுதி. இவற்றுடன் இணைக்கப்பட்ட பிற பல்பரப்பு திசைவிகளுக்கு (Multicast Routers) தமது புரவன் குழு உறுப்பினர் தகுதியை அறிவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது.

Internet language : இணைய மொழி.

Internet information Server : இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வர் : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன் (Webserver) மென்பொருள். ஹெச்டீடீபீ (http - Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வைய விரி