பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/787

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Interrupt Request Line

786

Interview



குறுக்கீடே முதலில் கவனிக்கப்படும். சில கணினிகளில் இரண்டுமே செய்யப்படும்.

Interrupt Request Line (IRL) : குறுக்கீட்டு வேண்டுகோள் வரி : குறுக்கீடு செய்யவேண்டிய சமிக்கை தருவதற்கு ஒரு சாதனத்தினால் பயன்படுத்தப்படும் ஒரு வரி தரவுக் கோடு.

Interrupt return : குறுக்கீட்டு திரும்ப வரல் : குறுக்கீட்டினால் தடை செய்யப்பட்டு மீண்டும் இயங்குமாறு செயலகத்திற்கு நிரல் தருகின்ற எந்திர நிரல்.

Interrupt service routine : குறுக்கீட்டு சேவை வாலாயம் : உடனடியாக இயக்கப்படும் நிரலாக்கத்தொடர். மையச் செயலகம் தற்போது செய்யும் வேலையை ஐஎஸ்ஆர் சேமித்து, குறுக்கீடு செய்யப்பட்ட வேலையை முடித்துவிட்டு, மீண்டும்விட்ட இடத்தில் இருந்து தொடரும்.

Interrupt vector : குறுக்கீட்டு நெறியம் : ஒரு பட்டியலின் தனித்தன்மை. குறுக்கீடு சேவையின் ஆரம்ப முகவரிகளைக் கொண்டது. இது இருப்பதனால் மையச் செயலகமானது குறுக்கீடு வரும்போது எங்கே குதிக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

Interrupt vector table : குறுக்கீட்டு நெறிய அட்டவணை : சேவை வழமைகளில் குறுக்கீடு செய்வதற்கான நெறிகளைக் (வெக்டார்கள்) கொண்டுள்ள ஒரு அட்டவணை.

Intersect : குறுக்கு வெட்டு : உறவுமுறை தரவுத் தளங்களில் இரண்டு கோப்புகளைப் பொருத்திப் பார்த்து இரண்டுக்கும் பொதுவாக உள்ளவற்றைக் கொண்டு ஒரு மூன்றாவது கோப்பை உருவாக்குவது.

Interval timer : இடைவேளை நேரம் காட்டி : ஒரு கணினி அமைப்பில் கடந்துபோன நேரத்தைக் கண்காணிக்கும் எந்திர அமைப்பு.

Interview : நேர் முகம்; நேர் காணல் : 1. அமைப்பு வடிவமைப்பு மற்றும் ஆய்வில் உண்மை தேடும்முறை. 2. வேலைதரும் நபருக்கும் வேலைக்கு விண்ணப்பிப் பவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல். நேர் முகத்தின்போது ஒருவருக்கு தனது திறமைகள், கல்வி, மற்றும் கடந்தகால பட்டறிவைப் பற்றியும் அந்த வேலையில் அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் விளக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.