பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/791

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I/O

790

ION



I/O : ஐ/ஓ : (உள்ளீடு/வெளியீடு) உ/வெ என்பது input/output என்பதன் குறும்பெயர். மையச் செயலகத்திலிருந்து வெளிப்புறச் சாதனங்களுக்கு தரவுகளை மாற்றுதல். ஒவ்வொரு மாற்றலும் ஒரு சாதனத்திற்கு வெளியீடாகவும், இன்னொன்றுக்கு உள்ளீடாகவும் அமைகிறது.

I/O area : உ/வெ பகுதி : உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து தரவுகளை ஏற்கவோ அல்லது வெளியீட்டுச் சாதனத்திற்கு அனுப்பவோ தரவுகளை சேர்த்து வைக்கவோ பயன்படுத்தப்படும் நினைவக தனிப் பிரிவு. டிபிஎம்எஸ்ஸிலோ அல்லது செயலாக்க நிரலாக்கத் தொகையிலோ இயக்க அமைப்புப் பயன்பாட்டு நிரலாக்கத் தொடரிலோ இது அமைக்கப்படும்.

I/O board : உ/வெ பலகை : கணினிக்கும் வெளிப்புறச் சாதனங்களுக்கும் இடையிலான உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுத் தரவுகளைக் கட்டுப்படுத்தும் மின்சுற்றுப் பலகை.

I/O bound : உ/வெ கட்டுப்பட்ட, சார்ந்த : அதிகநேர மையச் செயலக காத்திருக்கும் நேரம் ஏற்படும் வகையில் பேரளவு உள்ளீடு/வெளியீடு இயக்கங்கள் தேவைப்படும் நிரலாக்கத் தொடர்களை இது குறிப்பிடுகிறது.

I/O card : உ/வெ அட்டை : 1. உ/வெ கட்டுப்பாட்டு அல்லது விரிவாக்க அட்டை. 2. மோடெம், பேக்ஸ், லேன் அல்லது பிற ஐ/ஒ சாதனத்துடன் இணைக்கப்படும் பி. சி (PC).

I/O channel : உ/வெ வழித்தடம்; உ/வெ தடம் : ஒரு கணினியின் உள்ளீடு/வெளியீடு அமைப்பின் பகுதி. உ/வெ ஆணைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள் சேமிப்பகத்திலிருந்து வெளிப்புறக் கருவிக்குத் தரவு தொகுதிகளை மாற்றும் வழித்தடம்.

I/O Control System (IOCS) : உள்ளீடு/வெளியீடு கட்டுப்பாட்டு முறைமை.

Iocs : ஐயோக்ஸ் : உ/வெ கட்டுப்பாட்டு அமைப்பு.

IO divice : உ/வெ சாதனம்.

ION : இயான் : தன்னுடைய கூட்டில் ஒன்று அல்லது மேற்பட்ட இயான்களை சேர்த்ததால் அல்லது இழந்ததால் தன் மின்சக்தி நடுநிலைத் தன்மையை இழந்த ஒரு எதிர் மின்மம் எலெக்ட்ரான் அல்லது மூலக்கூறு 'மாலிக்யூல்'.