பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/792

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ion Deposition

791

IP



ion Deposition : இயான் டிப்போசிஷன் : அதிவேக பக்க அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம். இது லேசர் பிரின்டிங் போன்றதே. ஆனால், உருளையில் ஒரு உருவத்தை உண்டாக்க ஒளியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அச்சிடும் முனையைப் பயன்படுத்தி அயான்களைச் செலுத்துகிறது. உருளையில் அயான்கள் சேர்க்கப்பட்டவுடன், காகிதம் நேரடியாக உருளைக்கு அனுப்பப்பட்டு டோனருடன் காகிதம் சேருகிறது. லேசர் அச்சுப்பொறி போன்ற தரம் கிடைக்கிறது.

I/O exception : உ/வெ விதிவிலக்கு.

I/O instruction : உ/வெ ஆணைகள் : உ/வெ கட்டளைகள்.

I/O interface : உ/வெ இடைமுகம் : மையச் செயலகம் மற்றும் ஒரு வெளிப்புறச் சாதனத்திற்கு இடையில் உள்ள வழித்தடம் அல்லது பாதை.

I/O port : உ/வெ வாயில்; முகப்பு : காட்சித்திரை முகப்புகள், தட்டச்சுகள், வரி அச்சுப் பொறிகள் மற்றும் காந்தவட்டு அலகுகள் போன்ற மையச் செயலகத்தின் தரவுப்பாதைகளுக்கும், வெளிப்புறச் சாதனங்களுக்கும் இடையில் மையச் செயலக அலகின் இணைப்பு.

I/O processor : உ/வெ செயலகம் : கணினிக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையிலான உள்ளீடு/வெளியீடு இயக்கங்களை மட்டும் கையாளும் மின் சுற்றுப் பலகை அல்லது சிப்பு.

I/O statement : உ/வெ கட்டளை : உ/வெயிடம் வேண்டுகோள் விடுக்கின்ற நிரலாக்கத் தொடர மைப்பு ஆணைகள்.

IO. SYS : ஐ. ஒ. சிஸ் : எம்எஸ்டாஸ் இயக்க முறைமையில் தொடக்கமுறை வட்டுகளில் பதியப்பட்டுள்ள, மறைத்து வைக்கப்பட்டுள்ள இரு முறைமைக் கோப்புகளுள் ஒன்று. ஐபிஎம் வெளியிட்ட எம்எஸ்டாஸ் பதிப்பில் இக்கோப்பு IBMBIO. COM என்றழைக்கப்பட்டது. கணினித்திரை, விசைப்பலகை, நெகிழ் வட்டகம், நிலை வட்டகம், நேரியல் துறை மற்றும் நிகழ்நேரக் கடிகாரம் போன்ற புறச்சாதனங்களுக்கான சாதன இயக்கிகளைக் கொண்டிருக்கும்.

IO symbal : உ/வெ குறியீடு.

IP : ஐபி : இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol என்ற தொடரின்