பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/794

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IP multicasting

793

IP switching



குறும்பெயர். எதிர்கால கணிப்புச் சிக்கல்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பட்டியல் செயலாக்க மொழி.

IP multicasting : ஐபீ குழுவாக்கம் : குழுவாக்க இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol Multicasting என்ற தொடரின் சுருக்கம். குறும்பரப்புப் பிணையக் குழுவாக்கத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டீசிபி/ஐபீ பிணையமாக மாற்றியமைக்கும் முறை. புரவன் கணினிகள் (Hosts) குழுவாக்கிய செய்தித் தொகுதிகளை அனுப்பும்/பெறும். இலக்கின் முகவரியில் ஒற்றை ஐபி முகவரிக்கும் பதிலாக ஐபீ புரவன் குழு முகவரிகளைக் கொண்டிருக் கும். ஒரு புரவன் என்பது ஒரு குழுவின் உறுப்பினராகக் கருதப்படும். இணையக் குழுமேலாண்மை நெறிமுறை (Internet Group Management Protocol) இதனை நெறிப்படுத்தும்.

IPng : ஐப்பிங் : அடுத்த தலை முறைக்கான இணைய நெறி முறை என்று பொருள்படும் Internet Protocol next generation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய நெறிமுறையின் (Internet Protocol) ஒரு வடிவம். மூல இணைய நெறி முறையை (IP) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. சிறந்த பாதுகாப்புக் கொண்டது. ஐபீ முகவரி முந்தையதைவிட நீளமானது; 16 பைட்களால் ஆனது.

IPS (Inches Per Second) : ஐபீஎஸ் : Inches per second என்பதன் குறும்பெயர். ஒரு படி/எழுது முனையை நாடா கடந்து செல்வது அல்லது ஒரு வரைவானில் (பிளாட்டர்) காகிதம் கடந்து செல்வது ஆகியவற்றைக் குறிப்பிடுவது.

IP spoofing : ஐபீ ஏமற்றும் : ஒரு கணினி அமைப்புக்குள் அத்து மீறி நுழையும் பொருட்டு பொய்யான அனுப்புநர் ஐபீ முகவரியை இணையத் தரவு தொடர்பில் செருகும் செயல்.

IP switching : ஐபீ இணையப்பாக்கம் : இப்சிலான் நெட்வொர்க்ஸ் (சன்னி வேல், கலிஃபோர்னியா) நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். பொதுவான இலக்கு முகவரிக்கு தொடர்ச்சியான ஐபீ பொதிகளை அகல அலைக்கற்றையில், ஒத்தியங்கா செலுத்த முறையில் (Asynchronous Transfer Mode-ATM) அதிவேகத்தில் அனுப்ப வழிசெய்கிறது.