பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/795

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IPv6

794

IRL



IPv6 : ஐபீவி6 : இணைய நெறிமுறை பதிப்பு 6 என்று பொருள் Internet Protocol Version 6 என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அடுத்த தலைமுறை இணைய நெறிமுறையாக, இணையப் பொறியியல் முனைப்புக்குழு (Internet Engineering Task Force) 1995 செப்டம்பர் 2-ல் பரிந்துரைத்த நெறிமுறை. இதன் முந்தைய பெயர் ஐப்பிங் (IPng).

IPX/SPX : ஐபிஎக்ஸ்/எஸ்பிஎக்ஸ் : நாவெல் நெட்வேர் பிணைய முறைமையில் பயன்படுத்தப்படும் பிணைய நெறிமுறை. பிணைய (Network) மற்றும் போக்குவரத்து (Transport Layer) அடுக்குகளில் செயல்படும் நெறிமுறை. டீசிபீயும் ஐபீயும் இணைந்த டிசிபி/ஐபி நெறிமுறைக்கு இணையானது.

. iq : . ஐகியூ : ஒர் இணைய தளம் ஈராக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. ir : . ஐஆர் : ஒர் இணைய தள முகவரி ஈரான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

IRG : ஐஆர்ஜி : Inter Record Gap என்பதன் குறும்பெயர்.

IRGB : ஐஆர்ஜிபி : அடர்வுச் சிவப்பு பச்சை நீலம் என்று பொருள்படும் (Intensity Red Green Blue) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முதன்முதலில் ஐபிஎம் மின் சிஜிஏ (Colour Graphics Adapter) அட்டைகளில் பயன்படுத்தப்பட்ட நிறக் குறியீட்டு முறை. அதன் பிறகு இஜிஏ (Enhanced Graphics Adapter) மற்றும் விஜிஏ (Video Graphics Adapter) அட்டைகளிலும் அது தொடர்ந்தது. வழக்கமான 3 துண்மி (பிட்) ஆர்ஜிபி நிறக்குறியீட்டில் (எட்டு நிறங்களைக் குறிக்கும்) நான்காவதாக ஒரு துண்மியைச் சேர்த்து (நிறத்தின் அடர்த்தியைக் குறிக்க) 16 நிறங்கள் குறிப்பிடப்பட்டன. சிவப்பு, பச்சை, நீல நிறச் சமிக்கைகளின் அடர்த்தியை ஒரே சீராக அதிகரித்துப் புதிய நிறங்கள் பெறப்படுகின்றன.

IRL : ஐஆர்எல் : மெய்யான வாழ்க்கையில் எனப் பொருள்படும் In Real Life என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் நிகழ்நிலை (on-line) பயனாளர்கள் பயன்படுத்தும் சொல். குறிப்பாக, மெய்நிகர் (Virtual) உலகில் இணைய உரையாடல், இணைய அரட்டை, மெய்நிகர்