பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/797

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

irrational number

796

ISDN



கணினிச் செயல்பாட்டில் குழப்பமே மிஞ்சும்.

irrational number : அல்பின்ன எண் : இரண்டு முழு எண்களின் விகிதமாகக் குறிப்பிட முடியாத ஒரு மெய்யெண். (எ-டு) 3, π e, ஆங்கிலத்தில் எதிர்மறைக்கு un, im, ir, non போன்ற முன்னொட்டுகள் உள்ளன. வட மொழியில் அ, நிர், துர் போன்ற முன்னொட்டுகள் உள்ளன. அது போலத் தமிழிலும் அல்லாத என்று பொருள் தரும் அல் என்னும் முன்னொட்டை (prefix) பயன்படுத்தலாம்.

. is : . ஐஎஸ் : ஒர் இணைய தளம் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ISA : ஐஎஸ்ஏ : Industry Standard Architecture என்பதன் சுருக்கம். ஐபிஎம் பீசிஏடீயுடன் அறிமுகப்படுத்தப்பட்ட 16 துண்மி மின் இணைப்புத் தொகுதி சார்ந்த தர நிர்ணயம்.

ISAM : ஐஎஸ்ஏஎம் : Indexed Sequential Accessed Method என்பதன் குறும்பெயர்.

ISAPI : ஐசாப்பி; ஐஎஸ்ஏபிஐ : இணைய வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Internet Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட்டின் இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வரில் இயங்கும் (IIS) பின்னிலைப் பயன்பாடுகளுக்குரிய உயர்திறன் இடைமுகங்களை மிக எளிய வழியில் உருவாக்க இது உதவுகிறது. ஐசாப்பி தனக்கென ஒர் இயங்கு நிலைத் தொடுப்பு நூலகத்தைக் கொண்டுள்ளது. சிஜிஐ (CGl-Common Gateway Interface) வரையறுப்புகளைவிடவும் கூடுதல் திறன் மிக்கது எனக் கருதப்படுகிறது.

ISA slot : ஐஎஸ்ஏ செருகுவாய் : ஐஎஸ்ஏ (ISA - Industry Standard Architecture) தர வரையறைப்படி அமைந்த புறச் சாதனத்துக்கான ஒர் இணைப்புத் துறை. 80286 (ஐபிஎம் பீசி/ஏடீ) தாய்ப் பலகையில் பயன்படுத்தும் பாட்டைக்காக உருவாக்கப்பட்டது.

ISDN : ஐஎஸ்டிஎன் : தகவல் தொடர்பு கம்பியில் குரல், ஒளி மற்றும் தரவுகளை அனுப்புவதற்கான பன்னாட்டுத் தொலைத் தகவல் தொடர்பு தர நிர்ணயம். அலைக் கற்றை சமிக்கை முறையை இது பயன்படுத்துவதனால் கட்டுப்பாட்டு தகவலுக்கு தனி வழித்தடம் கிடைக்கும். அடிப்படை /