பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/798

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ISDN terminal adapter

797

Isochronous



ஆரம்ப விகித இடைமுக வடிவங்களில் இது கிடைக்கிறது. மோடெம் மூலம் தரவு தொடர்பு கொள்ளும் பி. சி. களுக்கு நொடிக்கு 9, 600 துண்மிகள் வேகமாயினும், ஐஎஸ்டி என்னில் 64 கிலோ துண்மிகள் ஒரு நொடிக்கு என்ற வேகம் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.

ISDN terminal adapter : ஐஎஸ்டிஎன் முனையத் தகவி : கணினியை ஐஎஸ்டிஎன் தடத்துடன் இணைக்கும் வன்பொருள் இடைமுகம்.

ISIS : ஐஎஸ்ஐஎஸ் : சிஎம்யு மற்றும் வெஸ்டிங் ஹவுஸ் உருவாக்கிய ஆலை நேரம் அமைக்கும் ஏபிஐ திட்டஅமைப்பு. வேலைக்கான நேரப் பட்டியல்களை உருவாக்குவதுடன் முரண்பட்ட காரணிகளையும் மதிப்பீடு செய்கிறது.

Islands of Information : தகவல் தீவுகள் : ஒரு தகவல் ஜிஐஎஸ் எம்ஐஎஸ் அல்லது டிஎஸ்எஸ் போன்ற தகவல் சேமிப்பில் ஏற்புடைத் தன்மை இல்லாத ஒன்று. பெருமுகக் கணினி நாடாக்களின் தரவுக் கோப்புகள் பி. சி. நெகிழ் வட்டுக்கள் போன்ற பருப் பொருளாகவோ அல்லது அஸ்கி, எப்சிடிக் போன்றவற்றில் எழுதப்பட்ட சில தகவல்கள் போன்ற மின் தொடர்பானதாகவோ இருக்கலாம். வேறொன்றில் மாற்றப்பட முடியாத தகவல் 'தகவல் தீவு' எனப்படுகிறது.

ISO : ஐஎஸ்ஓ : International Standards Organisation என்பதன் குறும்பெயர். தகவல் பரிமாற்றத்துக்கான தர நிர்ணயங்களை உருவாக்கப் பொறுப்பேற்றுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம். அமெரிக்காவின் 'அன்சி' போன்ற ஒரு பணியைச் செய்கிறது.

ISO - 7 : ஐஎஸ்ஓ - 7 : ஒவ்வொரு எழுத்துக்கும் 7 துண்மிகள் கொண்டதாக உலக அளவில் ஏற்றுக்கொண்ட எழுத்துக் குறியீடு. (ஐஎஸ்ஓ 646 - 1973).

ISOC : ஐஎஸ்ஓசி : இணையச் சங்கம். இணையத்தை ஆராய்ச்சி மற்றும் அறிவார்ந்த தகவல் தொடர்பு கூட்டுறவுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு பன்னாட்டு இலாப நோக்கற்ற உறுப்பினர் நிறுவனம்.

Isochronous : ஐசோக்ரனஸ் : காலம் சார்ந்தது. உண்மை நேர குரல், ஒளி மற்றும் டெலி மெட்ரி போன்றவை ஐசோக்ரனஸ் தரவுகளுக்கு எடுத்துக் காட்டு.