பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/799

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Isolation

798

ISP



Isolation : தனிமை; தனிமைப் படுத்தல் : 1. ஒரு கணினி பாதுகாப்பு அமைப்பில், தரவுவைப் பகுதி பகுதியாகப் பிரித்து தேவையின் அடிப்படையில் அணுகுதல். 2. தனியாகப் பிரித்திருத்தல் அல்லது மற்றவற்றிலிருந்து தனிப்படுத்தல்.

isolation item : தனிமை உருப்படி.

Isometric view : ஐசோமெட்ரிக் கண்ணோட்டம் : கணினி வரை கலையில் மூன்று பரிமாணங்களையும் சம விகிதங்களில் காட்டும் முப்பரிமாணப் பொருளின் படம். ஐசோமெட்ரிக் பார்வையில் உண்மையான தோற்றம் காட்டப்படுவதில்லை.

ISO/OSI model : ஐஎஸ்ஓ/ ஓஎஸ்ஐ மாதிரியம் : ஐஎஸ்ஓ - தரப்படுத்தலுக்கான பன்னாட்டு அமைப்பு (International Organisation for Standardization) ; ஒஎஸ்ஐ-திறந்த நிலை முறைமை சேர்த்தினைப்பு (Open Systems Interconnection), இரு கணினிகள் ஒரு தரவு தொடர்புப் பிணையத்தின் வழியாக தகவலைப் பரிமாறிக் கொள்வதில் அடங்கியுள்ள ஊடாடல் வகைப்பாடுகள், சேவைநிலைகள் ஆகியவற்றைத் தரப்படுத்தும் ஒர் அடுக்குமுறை கட்டுமானம். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியம் கணினிகளுக்கிடையேயான தகவல் தொடர்பினை ஏழு அடுக்குகளாகப் பிரிக்கிறது. ஒரு நிலையின் மீது எழுப்பப்பட்ட இன்னொரு நிலையென, ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. ஏழு அடுக்குகளில் முதலாவதாகக் கீழேயுள்ள அடுக்கு கணினி வன்பொருளுடன் தொடர்பு கொள்வதை மட்டுமே கவனித்துக் கொள்கிறது. ஏழாவதாக உள்ள மேலடுக்கு பயன் பாட்டு நிரல் நிலையில் மென் பொருள் ஊடாட்டங்களைக் கவனித்துக்கொள்கிறது.

Isotropic : ஐசோட்ரோப்பிக் : பொருள்களின் தன்மையைக் குறிப்பிடுகிறது. அனுப்புதல் வேகம் போன்றவை எந்தத் திசையில் அளிக்கப்பட்டாலும் ஒன்றாகவே இருப்பது.

ISP : ஐஎஸ். பீ : இணையச் சேவையாளர் எனப் பொருள்படும் (Internet Service Provider) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைவனங்களுக்கு இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம். சில சேவையாளர்கள் ஒரு நகரில் அல்லது ஒரு வட்டாரப்