பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

APL

79

Apple II


APL : ஏபிஎல் : A Programming Language எனும் மொழிக்கான குறும்பெயர். கணிதமுறையில் அமைக்கப்பட்ட செயலாக்க மொழி. கனக்குகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் புகழ்பெற்றது. ஏபிஎல் தன்னுடைய எளிய முறை இயக்கங்கள் மூலம் புத்தி சாலித்தனமான கணக்கிடு கருவி ஒன்றின் பணிகளைச் செய்கிறது.

APPC : ஏபீபீசி : 1. உயர் நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் முறைமைப் பிணையக் கட்டு (Systems Network Architecture) நெறி முறை உருவாக்கப்பட்டது. வேறுபட்ட கணினி முறைமை இயங்குகின்ற பயன்பாட்டுத் தொகுப்புகள். தமக்குள்ளே தொடர்பு கொள்ளவும் நேரடியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும் இந்நெறிமுறை உருவாக்கப்பட்டது.

app code : 'ஆப்'முறை : பயன்பாட்டுக் குறியீடு. தகவல்களை செயலாக்கம் செய்யும் ஒரு நிரலில் உள்ள ஆணைகள்.

appearance : தோற்றம்.

append : இணை;கூட்டு : தரவுத் தொகுப்பு ஒன்றுடன் மேலும் புதிய ஆவணங்களைச் சேர்த்தல் அல்லது எழுத்துத் தொடரின் இறுதியில் அல்லது பட்டியலின் இறுதியில் சேர்த்தல்.

appearance : தோற்றம்.

append mode : சேர் பாங்கு.

append record : சேர் ஏடு.

Apple : ஆப்பிள்நுண் கணினி வரிசையொன்றின் விற்பனைப் பெயர். இவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் ஆகும்.

Apple II : ஆப்பிள் II : ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 1977இல் அறி முகப்படுத்திய இரண்டாவது சொந்தக் கணினி (Personal Computer). இதில் 4கே இயங்கு நிலை நினைவகம் இருந்தது. 48கே வரை விரிவாக்கிக் கொள்ளலாம். 6502 என்னும் நுண் செயலி பயன்படுத்தப்பட்டது. வண்ணக் கணினித் திரைக்குப் பதிலாக, தொலைக்காட்சிப் பெட்டியைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி முதன்முதலாக ஆப்பிள் II கணினியில்தான்