பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/803

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Jaggies

802

java applet



மாற்றிய தானியங்கி நெசவு எந்திரம். எதிர்கால கணக்கீட்டுப் பட்டியலிடும் எந்திரங்களுக்கு வழிகாட்டி. ஃபிரெஞ்சுக்காரரான பட்டு நெசவு செய்யும் ஜோசப் மேரி ஜேக்வார்டு (1752 - 1834) உருவாக்கிய இப்பொறி துளையிட்ட அட்டைகளைப் பயன் படுத்தி இயக்கங்களைக் கட்டுப் படுத்துகிறது. ஏற்கெனவே இது புழக்கத்தில் இருந்தாலும், உடனடியாக சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்க ஜேக்குவார்டின் விசைத்தறி மிகவும் உதவியாக உள்ளது.

Jaggies - பிசிறுகள் : கணினி வரைகலை காட்சித் திரையில் படிகளாகவோ அல்லது வட்டங் கள், வளைவுகளில் வாள் பல்லாகவோ இருப்பது.

jam - நெரிசல்.

janet - ஜேநெட் : கூட்டுக் கலைக்கழகப் பிணையம் என்று பொருள்படும் Joint Academic Network என்பதன் சுருக்கம். இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் முதன்மை முது கெலும்புப் பிணையமாகச் செயல்படக் கூடிய ஒரு விரி பரப்புப் பிணையம் (Wide Area Network).

Jargon : குழுஉச் சொல் : ஒரு துறையில் பணியாற்றுபவர்கள் அத்துறையில் உள்ள பொருள்கள் /வேலைகளை விவரிக்கப் பயன்படுத்தும் சொற்கள். மற்றவர்களுக்குப் புரியாது. Java : ஜாவா : "சி ++ மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கணினி மொழி. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறு வனத்தில் பணிபுரிந்த ஜாஸ்லிங் என்பவர் உருவாக்கியது. எந்தக் கணினியிலும் எந்த பணித் தளத்திலும் இயங்கவல்லது. இணையப் பயன்பாடுகளுக்கு ஏற்றது. பிற கணினி அமைப்புகளுக்கு எந்த வித சேதமும் இல்லாமல் இயக்கங்களைச் செய்யக்கூடிய வகையில் கட்டுப்படுத்துவதால் இதை "பாதுகாப்பான மொழி" என்று கூறலாம்.

java applet - ஜாவா குறுநிரல் : ஜாவா மொழியில் இருவகையான நிரல்கள் உருவாக்கப்படு கின்றன. ஒன்று பயன் நிரல் (Application). மற்றது குறுநிரல் (Applet). இது ஒரு ஜாவா இனக் குழு (class). ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜாவா பயன்பாட்டுத் தொகுப்பு. இந்த ஜாவா இனக்குழுவினை தன்னுள் ஏற்றிக் கொண்டு அதிலுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. இணைய உலாவி, குறுநிரல் நோக்கி ஆகியவை குறுநிரல்களை ஏற்றி இயக்க வல்லவை. எடுத்துக்