பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/804

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

java application

803

Java Management



காட்டாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், ஹாட் ஜாவா போன்ற இணைய உலாவிகள் ஜாவா குறுநிரல்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இயக்கும் திறன் பெற்றவை. ஜாவா குறுநிரல்கள் பெரும்பாலும் ஒரு வலைப்பக்கத்தின் பல்லூடக (பின்னணி இசை, நிகழ்நேர ஒளிக்காட்சிப் படம், அசைவூட்டங்கள், கணக்கீடுகள் மற்றும் ஊடாடு விளையாட்டுகள்) விளைவுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பயனாளரின் தலையீடின்றி தாமாகவே இயங்கும்படி குறு நிரல்களை அமைக்க முடியும். அல்லது வலைப் பக்கத்திலுள்ள சின்னத்தின்மீது சுட்டியால் சொடுக்கும்போது இயங்கும் படியும் குறுநிரலை அமைக்கலாம்.

java application : ஜாவா பயன்பாடு; ஜாவா பயன்நிரல்.

JavaBean : ஜாவாபீன் : ஜாவா அடிப்படையிலான ஒரு மென்பொருள் நுட்பம்

java chip : ஜாவா சிப்பு : ஜாவா சில்லு ஜாவா மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை ஜாவா மெய்நிகர் பொறி (Java Virtual Machine - JVM) என்னும் ஆணைமாற்றி (Interpreter) செயல்படுத்துகிறது. ஜேவிஎம் செய்யும் பணியை நிறைவேற்றும் வகையில் ஒரு சிப்புவை ஒரு நுண்செயலியை வடிவமைக்க முடியும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் இத்தகைய சிப்புவை உருவாக்கியுள்ளது. இந்த சிப்புவை மிகச் சிறிய சாதனங்களில் கட்டுப்படுத்திகளாகப் பயன்படுத்த முடியும்.

java-compliant browser : ஜாவா இணக்க உலாவி : ஜாவா மொழி யில் எழுதப்பட்ட நிரலை ஏற்று இயக்கும் திறனுள்ள ஒர் இணைய உலாவி. தற்கால இணைய உலாவிகள் பலவும் ஜாவா இணக்கம் உள்ளவையே.

java database connectivity (JD BC) : ஜாவா தரவு இணைப்பாக்கம்.

Java Developer's Kit (JDK) : ஜாவா உருவாக்கக் கருவித் தொகுதி : சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருள் கருவிகளின் தொகுப்பு. ஜாவா பயன் நிரல்களையும் குறுநிரல்களையும் உருவாக்க உதவுபவை. இத்தொகுப்பு, ஜாவா மொழி மாற்றி, ஆணைமாற்றி, பிழை திருத்தி, குறுநிரல் நோக்கி மற்றும் ஆவணமாக்கிகளை உள்ளடக்கியது. இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.

Java Management Application Programming interface : ஜாவா