பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/806

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jewel box

805

job, batch



கம்ப்யூட்டரில் பயன்படுத்தக் கூடிய ஒரு மென்பொருள் விளையாட்டு.

jewel box : வட்டுப்பெட்டி : ஒரு குறு வட்டினை பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பெட்டி.


வட்டுப் பெட்டி


jiff : ஜிஃப் : ஜேபெக் (JPEG) கோப்புப் பரிமாற்ற வடிவாக்கத்தில் அமைந்த வரைகலைப் படிம கோப்புகளைக் குறிக்கும் வகை பெயர். (File Extension).

Jitter : தடுமாற்றம் : ஒரு சமிக்கையில் சிறு நிலையற்ற தன்மை. ஒளிக் (வீடியோ) காட்சித் திரையில் வரும் சமிக்கைகளுக்கு இஃது குறிப்பாக சொல்லப்படுகிறது.

JK technosoft : ஜேகே டெக்னோசாஃப்ட் : ஒரு கணினி ஆலோசனை மற்றும் மென் பொருள் நிறுவனம். ஜேகே தொகுதியைச் சேர்ந்தது.

. jm : . ஜேஎம் : இணையத்தில் ஒர் இணைய தளம் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

JMAPI  : ஜேஎம்ஏபிஐ : ஜாவா மேலாண்மைப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Java Management Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

. jo : . ஜேஒ இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

Job : முழுச் செயற்பாடு ; பணி : ஒரு கணினிக்கான வேலை அலகின் குறிப்பிட்ட பணி களின் தொகுப்பு. ஒரு நிரலாக்கத் தொடர் அல்லது தொடர்புள்ள நிரலாக்கத் தொடர்களின் தொகுதி ஒரு அலகாகப் பயன்படுத்தப்படுகிறது.

job, batch : தொகுதிச் செயற் பாடு; தொகுதிப் பணி.