பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/817

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

keyboard layout

816

keyboard to - disk system



keyboard layout : விசைப்பலகை உருவரை : ஒரு குறிப்பிட்ட விசைப்பலகையில் அமைந் துள்ள விசைகளின் அமைப்பு முறை. விசைகளின் எண் ணிைக்கை (தற்போதைய தரவரை யறை 101) மற்றும் விசைகளின் வரிசையமைப்பு (அமெரிக்க முறை குவெர்ட்டி (QWERTY) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. சில நிறுவனங்கள் தம் சொந்த விசைப்பலகை உருவரைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. விசைக்கும் அதனோடு தொடர்புடைய எழுத்துக்கும் இடையேயான உறவினை பயனாளர் தம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

Keyboard processor : விசைப் பலகைச் செயலகம் : விசை அடிப்புகளை பொருத்தமான எழுத்துக் குறியீடுகளாக மாற்றும் விசைப் பலகையின் மின்சுற்று.

keyboard punch விசைப் பலகைத் துளை.

Keyboard skills : விசைப்பலகை திறன்கள் : ஒரு கணினி விசைப்பலகையை திறமையாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தும் திறன். கணினி தொழில் புரிபவர்களுக்கு விசைப்பலகை திறன்கள் இன்றியமையாதவை

keyboard to - disk system : விசை என்று கருதப்படுகிறது. அன்றாட வாழ்க்கையிலும் இது தேவை என்பதால் ஒவ்வொரு வருக்கும் இது வாழ்க்கைத் திறனாக தேவைப்படுகிறது.

Keyboard, sys : விசைப்பலகை சிஸ் : விசைப் பலகையின் இயக் கத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கிச் சாதனம். -

Keyboard template : விசைப் பலகை படிம அச்சு அட்டை : கணினி விசைப் பலகையின் விசைகளில் பொருந்தும் ஒரு செயற்கை இழைப்படிவம். இதன் மூலம் குறிப்பிட்ட மென் பொருள் பயன்பாடுகளில் விசைப் பணிகளைச் செய்ய எளிதான, விரைவான குறிப்பு. விசைப்பலகை படிம அச்சு அட்டைகள் மென்பொருள் தொகுப்புகளின் பகுதியாக இப்போது அதிகமாக வழங்கப் படுகின்றன.

keyboard terminal : விசைப் பலகை முனையம் : ஒரு கணினி அமைப்புக்குள் தரவுகளை நுழைக்க அனுமதிக்கும் தட்டச்சு போன்ற விசைப் பலகை.

keyboard to - disk system : விசைப்பலகையிலிருந்து வட்டு முறைமைக்கு ; விசைப்பலகை யிலிருந்து வட்டுக்கான

அமைப்பு : விசைப்பலகையில்