பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/829

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

landmark

828

landscapes


ஆணை இடப்பட வேண்டும். ஆனால், இப்போது மின்சாரம் நிறுத்தப்படும்போது தானாகவே நடந்து விடுகிறது. அது நிறுத்தப்படும் இடம் விவரம் சேமிக்கப்படாத இடமாக இருக்கும். நிலைவட்டில் மிக அதிகமான எண் கொண்டுள்ள தடம்/ உருளையாக இருக்கும்.

landmark : லேண்ட் மார்க் : அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உரிமையாளர் வன்பொருள்/மென்பொருள் மதிப் பீட்டமைப்பு.

landmark rating : லேண்ட் மார்க் விகிதாச்சாரம் : லேண்ட் மார்க் ரிசர்ச் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பரவலாகப் பயன்படும் பீ. சி. செயல்திறன் சோதனை. மையச் செயலக வேகம் கடிகாரத்திற்குத் தேவைப்படும் வேகமாக ஏடி-வகுப்பு எந்திரங்களில் இருக்கிறதா என்று மதிப்பீடு செய்வது. இதன் மூலம் சமமான செயல்திறன் தர முடியும்.

lands : சமதளங்கள் : குறுவட்டுகளில் 1 எனும் பிட்டைக் குறிக்கும். குழி (pit) 0-வை குறிக்கும்.

landscape : லேண்ட்ஸ்கேப் ; அகண்மை : அச்சுப் பிரதி உருவங்களை அமைப்பது குறித்தது. வேலையை ஒரு பக்கத்தில் நீள வாட்டத்தில் அச்சிட வைக்கிறது. பொதுவாக செங்குத்தாக அச்சிடுவதே வழக்கமாகும்.

landscape format : அகண்மை வடிவமைப்பு : பரப்புத் தோற்ற உருவமைவு.

landscape mode : பரப்புத் தோற்றப் பாங்கு : அகண்மைப் பாங்கு : ஓர் உரைப்பகுதி அல்லது ஒரு படிமம் உயரத்தைவிட அகலம் அதிகம் இருப்பின் அச்சுப்பொறியில் கிடைமட்டமாக அகலவாக்கில் அச்சிடலாம். நீள்மைப் பாங்கு Portrait எனப்படும்.

landscape monitor : அகண்மை திரையகம்; பரப்புத் தோற்றக் காட்சித்திரை : உயரத்தைவிட அகலம் அதிகம் இருக்கும் கணினித் திரையகம். இது போன்ற திரை உயரத்தைக் காட்டிலும் அகலம் 33 சதவீதம் அதிகம் இருக்கும். ஒரு தொலைக்காட்சித் திரையின் நீள அகல வீதங்களை ஒத்திருக்கும்.

landscape printing : அகல வாக்கில் அச்சிடுதல்.

landscapes : லேண்ட்ஸ்கேப்ஸ் : நுண்கணினிகளுக்கான மைக்ரோ - சாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருள். கான்டூர் (Contour) படங்கள் மற்றும்