பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/836

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

layered interface

835

layout sheet



முறையிலான தொடர்பில் தரவுகளின் துணைத் தொகுதி. 2. முப்பரிமாண வரிசையில் மூன்றாவது பரிமாணம்.

layered interface : அடுக்குநிலை இடைமுகம் : கணினி வன்பொருளுக்கும் அதில் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளுக்கும் இடையே ஒன்று அல்லது மேற்பட்ட நிலைகளில் இருந்து செயல்படக்கூடிய நிரல்கூறுகள். முடிக்க வேண்டிய பணிகளுக்கேற்ப எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். பயன்பாட்டையும் அது செயல்படும் வன்பொருளையும் நேரடித் தொடர்பின்றி பிரிப்பதே அடுக்குநிலை இடைமுகத்தின் நோக்கம். முடிவில் இதுபோன்ற இடைமுகம், ஒரு நிரலை வெவ்வேறு வகைக் கணினிகளில் இயங்கச் செய்வது சாத்தியமாகும்.

layered panel : அடைக்கும் பாளம்

layering : அடுக்கமைத்தல்; அடுக்கு ஒரு தனி ஒவியத்திற்குள் வரைபடமுறை தரவுகளின் துணைக் குழுக்களைத் தொடர்பு படுத்தும் அளவைமுறைக் கோட்பாடு. மிகச் சிக்கலான கோப்பின் அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதன் மூலம் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, கணினியில் வேலை செய்யும் பகுதிகளை மட்டுமே பார்க்க இது அனுமதிக்கிறது.

layout : வெளிப்புற அமைப்பு : இட அமைவு : ஒட்டு மொத்த வடிவமைப்பு அல்லது திட்டம் கணினி அமைப்பு, ஒடு படம், திட்ட வரைபடங்கள், அச்சுப் பொறிக்கான வடிவமைப்பு, அட்டைபத்திகளின் வெளி யீட்டு வடிவமைப்பு, ஒரு ஆவணம் அல்லது புத்தகத்தின் வெளி அமைப்பு போன்றது.

layout forms and screens : வடிவமைப்புப் படிவங்களும், திரைகளும் : படிவங்கள் மற்றும் உள் ளீடு/வெளியீடு ஊடக உள்ளடக்கம் மற்றும் முறைகளை உருவாக்குவதற்கான கருவிகள். காட்சித் திரைகள் மற்றும் அறிக்கைகள் இவற்றுக்கு சான்று.

layout setting : பக்கம் அளத்தல் : ஒரு அச்சிடப்படும் பக்கத்தை அமைப்பதற்கான மதிப்புகளை அளித்தல். ஒரங்கள், பத்தி அளவு, மேற்பகுதி, கீழ்ப்பகுதி, தலைப்புகள், பட்டியல்கள் ஆகியவை இதற்கு எடுத்துக் காட்டுகள்.

layout sheet : வெளியமைப்புத் தாள்; அமைவுத்தாள் : நிரலாக்கத் தொடர் திட்டமிடலுக்காக காட்சித்திரையில் உள்ளதைக் காட்ட வடிவமைக்கப்பட்ட