பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

application close

83

application development


 ஆகியவை இந்தப் பிரிவைச்சாா்ந்தவை.

application close : பயன்பாட்டு நிறுத்தம்.

application control menu : பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி.

application control : பயன்பாட்டுக் கட்டுப்பாடு : கணினி பயன்பாடு - உற்பத்திப் பயன்பாடுகளில் துல்லியமாக, சரியான நேரத்தில், தகவல்கள் செயலாக்கப்படுவதை உறுதி செய்ய, கணக்குத்துறை மற்றும் கணினித்துறை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பரிந்துரைக்கும் கட்டுப்பாடு.

application controller : பயன்கருவிக் கட்டுப்படுத்தி : கணினி ஒரு துணைக் கருவியைக் கட்டுப்படுத்த உதவும் சாதனத்திற்குப் பொதுவான பெயர்.

application developer : பயன்பாடு உருவாக்குபவர் : வணிகப் பயன்பாட்டை உருவாக்கி, முறைமை ஆய்வாளர் மற்றும் பயன்பாட்டு நிரலர் பணிகளைச் செய்யும் ஒரு நபர்.

application development environment : பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கச் சூழல் : மென்பொருள் உருவாக்குவோர் பயன்படுத்தக்கூடிய, செயல்முறைத் தொகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பு. ஒரு மொழி மாற்றி (compiler), உலாவி (browser), பிழைசுட்டி (debugger), ஆனைத் தொடர்களை எழுதப் பயன்படும் ஒர் உரைத் தொகுப்பான் (text editor) ஆகியவை சேர்ந்தே இத்தகைய பணிச்சூழலை வழங்குகின்றன.

application development language : பயன்பாட்டு மென்பொருள் உருவாக்க மொழி : பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட மொழி. தரவுத் தளத்திலுள்ள தரவுகளைப் பெறுதல், புதுப்பித்தல் மற்றும் அதையொத்த பணிகள், தரவுவை உள்ளீடு செய்வதற்குரிய படிவங்களை உருவாக்குதல் மற்றும் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளுக்கான உயர்நிலைக் கட்டளை அமைப்பு குறிப்பிட்ட கணினி மொழிகளை மட்டுமே இது குறிக்கிறது.

application development system : பயன்பாட்டு உருவாக்க முறைமை : உருவாக்குதல், மேம்படுத்தல் மற்றும் பயன்பாட்டு ஆணை நிரல்களை இயக்க அனுமதிக்கும் நிரலாக்க மொழி மற்றும் அதன் தொடர்பான பயன்பாடுகள். வினவல்