பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/852

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

line level

851

line printer control


ஸ்கிரிப்ட்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் இரண்டு வரித் துண்டங்கள் அச்சிடப்படும் போது இணைக்கப்படும் முறை.

line level : கம்பி நிலை : தரவு தொடர்பு வழித்தடத்தில் சமிக்கையின் பலம். டெசிபல் அல்லது நெப்பர் முறையில் அனுப்பப்படுகிறது.

line load : இணைப்புச் சுமை : 1. தகவல் தொடர்பில், ஒரு தகவல் தொடர்புத் தடத்தின் உச்சக் கொள்திறனுக்கும் நடப்பில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு இணைப்புகளுக்கும் இடையே யான விகிதமாக அளக்கப்படுகிறது. 2. மின்னணு வியலில் ஒரு மின்னிணைப்பு சுமந்து செல்லும் மின்னோட்டத்தின் அளவு.

line noise : இணைப்பு இரைச்சல் : ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பரிமாறிக் கொள்ளப் படும் தகவலுக்கு இடையூறாகக் கலக்கும் போலிச் சமிக்கைகள். தொடர்முறை (analog) இணைப்பில் இரைச்சலானது உண்மையான கேட்பொலித் தொனி போலவடிவெடுக்கும். ஓர்இலக்க முறை (digital) இணைப்பில், இரைச்சல், தரவுவைப் பெறும் முனையிலுள்ள சாதனம் சரியான தரவுவைப் பெறுவதற்கு இடையூறாக இருக்கும்.

line number : வரிசை எண் : வரி எண் : பேசிக் போன்ற நிரல் தொகுப்பு மொழிகளில், அடை யாளம் காணலுக்காக ஆதார நிரல் தொகுப்பின் ஒரு வரியின் துவக்கமாக அமைகிற எண், எண் அடையாள வில்லை.

line of sight : பார்க்கும் கம்பி : கம்பித் தொடர்பில்லாத நுண்ணலை (Microwave) தகவல் தொடர்பில் அனுப்பும், வானலை (ஆன்டெனா) வாங்கிக்கும் பெறும் வானலை (ஆன்டெனா) வாங்கிக்கும் இடையே தடையேதும் இல்லாமல் அமைப்பது.

line of sight transmission : நேர் பார்வைச் செலுத்துகை.

line out : வெளிசெல் இணைப்பு.

line plot : வரி இடம் : தரவு புள்ளிகள் வெளிப்படும் வரைபடம் மற்றும் புள்ளிகளை இணைக்கும் கோடுகள்.

line printer : வரி அச்சடிப்பி;வரி அச்சுப்பொறி; வரிவாரி அச்சடிப்பி : ஒரே நேரத்தில் ஒரே வரியை வெளியீடாக வழங்கும் புறநிலை அச்சிடு கருவி.

line printer control : வரி அச்சக் கட்டுப்படுத்து கருவி : எழுத்து அச்சுகளை, புடைப்புகளை தானியங்கிக் கட்டுப்பாட்டை வழங்குகிற சாதனம் மற்றும்